ஞாயிறு, 29 ஜனவரி, 2017

சாதி தேசத்தின் சாம்பல் பறவை .. எவிடென்ஸ் கதிர் ( வின்சென்ட் ராஜ்)

Vincent Raj · சாதி தேசத்தின் சாம்பல் பறவை புத்தகத்தை எடுத்து கொண்டு தாமிரபரணி, பரமக்குடி,கீழ் வெண்மணி, தருமபுரி, திண்ணியம், கொட்டைக் காட்சியேந்தல்,புளியங்குடி போன்ற பல பகுதிகளுக்கு செல்ல இருக்கிறேன்.இந்த பயணத்தின் முதல் துவக்கம் பெரியகுளத்தில் ஆரம்பித்து உள்ளது.முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா தலித் இளைஞர் நாகமுத்துவின் தற்கொலையில் குற்றம்சாட்ட இருப்பவர். இவருக்கு எதிராக எவிடென்ஸ் அமைப்பு கடந்த 4 வருடங்களாக சட்ட போராட்டம் நடத்தி வருகிறது.நாகமுத்துவின் அம்மா அப்பாவுக்கு முதல் பிரதி கொடுத்தேன்.அந்த சமயம் இருவரும் கண் கலங்கினார்.நாகமுத்து சாகவில்லை.அவனுக்கு பதில் நீ இருக்க.நீதான் எங்கள் குடும்பத்தின் முதல் பிள்ளை என்றார்கள்.
அதற்கு நான், நான்தான் முதல் பிள்ளை.அதில் என்ன சந்தேகம்? என்று ஆறுதல் கூறி அம்மா அப்பாவுக்கு என்று எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தேன்.நிறைய கூட்டம் கூடிவிட்டது.போலீஸ் பாதுகாப்பிற்கு வந்து இருந்தனர்.நிறைய இளைஞர்கள் விலை கொடுத்து சாம்பல் பறவையை வாங்கி சென்றனர்.

Vincent Raj 9 hrs · கொட்டகாட்சியேந்தல் பஞ்சயாத்து தலைவர் கருப்பன்.தலித்
சமூகத்தை சேர்ந்தவர்.பஞ்சாயத்து அலுவலகத்தில் கருப்பன் அவர்களை நாற்காலியில் உட்கார வைக்காமல் தரையில் உட்கார வைத்து இருந்தனர்.அவரது காசோலை அதிகாரத்தை ரத்தும் செய்து இருந்தனர்.அவரை சாதி ரீதியாக இழிவாகவும் பேசி வந்தனர்.கடும் சித்ரவதைக்கு ஆளான கருப்பன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்னை சந்திக்க வந்து இருந்தார்.அய்யா என்னை காப்பாற்றுங்கள் என்று கண்கலங்கினார்.இந்த பிரச்னையை தேசிய அளவிற்க்கு எடுத்து சென்றோம்.மாவட்ட ஆட்சி தலைவர், எஸ்.பி.உள்ளிட்ட அணைத்து அதிகாரிகளும் வேறு வழி இல்லாமல் விசாரணை நடத்தினர்.நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தோம்.பத்து ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சாயத்து நாற்காலியில் முதல் முறையாக தலித் சமூகத்தை சேர்ந்த கருப்பன் அவர்களை நாற்காலியில் உட்கார வைத்தோம்.எதிரிகள் ஓடி போனார்கள்.என் கரங்களை பற்றி கண்களில் வைத்து அய்யா உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று கண்ணீருடன் கூறினார்.இன்று சாம்பல் பறவையை எடுத்து கொண்டு கொட்டகாட்சியேந்தல் சென்று கருப்பனிடம் கொடுத்தேன்

Anandakumar Thangaraju வாழ்த்துக்கள், சற்று முன்னர் தான் இப் புத்தகத்தை படித்து முடித்தேன். ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு மிகவும் ஆறுதல் மற்றும் நம்பிக்கை அளிக்கும் ஒரு அதிசய ஒளி விளக்கு. இந்நூல் அணைத்து தரப்பினரையும், குறிப்பாக ஆதிக்க சாதி என்று கூறி கொள்வோர்க்கு சென்று சேர்ந்து அவர்களது மன சாட்சியை உலுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக