ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜோர்ஜ் பெனான்டஸ்.. 1977 இல் கோகா கோலாவை வெளியேற்றிய ஒரிஜினல் புரட்சி தலைவர்!

ஜோர்ஜ் பெனாண்டசை தமிழர்கள் ஒருபோதும் மறக்க முடியாது. எப்பொழுதும் தமிழர்களின்
நலன்களுக்காக  ஓங்கி குரல் கொடுக்க தயங்கியதே இல்லை. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த பொழுதெல்லாம் சாதாரண ஒரு அரசியல்வாதி போலல்லாது ஈழத்தமிழர்கள்
போராட்டம்,திபெத்தியர்கள் போராட்டம் , மியான்மார் நாட்டு விடுதலை போன்ற போராட்டங்களில் எல்லாம் ஜோர்ஜ் பெனாண்டசின் பங்களிப்பு உயர்ந்தே இருந்தது.
இவரும் கலைஞர் கருணாநிதியும் பிறந்தது ஜூன் 3 ஆம் தேதிதான். கலைஞரின் பிறந்த நாள் ஜோர்ஜ் பெனாண்டசின் பிறந்த நாளுமாகும்  (ஜோர்ஜ் பெனான்டஸ்  3 June 1930 , கலைஞர்  June 3, 1924)


 கோகா கோலாவை முதல் முதலில் 1977 இல் இந்தியாவில் இருந்து வெளி ஏற்றிவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அன்றைய தொழில்துறை இணையமைச்சராக இருந்த திரு. ஜோர்ஜ்
பெனான்டஸ் ஆகும். அன்றைய ஜனதா ஆட்சியில் கோகா கோலா கம்பனியின் பலவிதமான அந்நிய செலாவாணி முறையீடு காரணமாகவும் ஏராளமான அந்நிய செலாவணி நாட்டை விட்டு செல்கிறது போன்ற பல
காரங்களால் ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் முற்று முழுதாக அதை எதிர்த்து வெளியேற்றினார்.அதன் பின் உள்நாட்டிலேயே அதற்கு போட்டியாக உருவாக்க பட்டதுதான் டபுள் செவென் 77 கோலா.
நீண்ட போராட்ட வரலாற்றை கொண்ட ஜோர்ஜ் பெனான்டஸ் இன்று அல்சமைர் மற்றும் பாக்கின்சன் நோயிகளால் ஓரளவு நினைவு இழந்த நிலையில் உள்ளார் என்று அறியப்படுகிறது. இவரோடு சுமார் 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த ஜெயா ஜெட்லி தற்போது இவரை சந்திக்கவும் முடியாத இக்கட்டில் உள்ளார்.ஜோர்ஜ் நோய் வாய்ப்பட்டவுடன். அவரை விட்டு 1980  இல் பிரிந்து சென்ற அவரது மனைவி லைலா கபீர் மீண்டும் வந்து ஓட்டிகொண்டார். சட்டம் அவர்களுக்கு சாதகமாக இருக்கவே சுயநினைவு அற்ற நிலையில்  ஜெயா ஜெட்லி ஒதுங்க வேண்டியதாயிற்று.
அவரை  பார்பதற்கு  கூட மனைவி லைலா கபீர் அனுமதிக்க வில்லை.
நீதிமன்றத்தால் ஜெயா ஜேட்லிக்கு அனுமதி கிடைத்தும் அவரால் ஜோர்ஜ் பெனாண்டசை காண முடியவில்லை என்றே தெரிகிறது.
ஜோர்ஜ் பெனண்டசின்  சொத்துக்கள் அவரது மனைவிக்கும் மகனுக்கும்தான் உரித்தாக உள்ளது. மகன் தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராக இருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக