திங்கள், 30 ஜனவரி, 2017

தெருக்களில் கழிவு நீரை திறந்து விட்டால் கடுமையான தண்டப்பணம் அறவிட சட்டம்!

சென்னை, மாநகராட்சி தெருக்களில், குடியிருப்புவாசிகள் கழிவு நீரை திறந்து விட்டால் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டமுன் வடிவு தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேம்பாட்டு ஒழுங்கு முறையின் கீழ் அனுமதியின்றி கம்பி வடம், ஒயர், குழாய், வடிகால் மற்றும் கால்வாய் இணைப்பு அமைக்க ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விடுவதை தடுக்கும் சட்டமுன் வடிவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன்படி தெருக்களில் கழிவுநீர் விடும் வீட்டுக் காரர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். அதன்படி, குடியிருப்பு வாசிகள் தெருக்களில் கழிவு நீர் விட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கடைகளுக்கு ரூ.10 ஆயிரமும், அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு ரூ.1 லட்சமும், வணிக வளாகங்களாக இருந்தால் ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக