ஞாயிறு, 29 ஜனவரி, 2017

ஜல்லிகட்டு அவசர சட்டதில் ஒப்பம் இட ஆளுநர் தயங்கினார்? சதாசிவம் சபடாஜ்?


தமிழர்களின் சுமார் 5,000 ஆண்டுகள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இதனை எதிர்த்து கடந்த 3 ஆண்டுகளாக அமைதிகாத்த தமிழக மக்கள் கடந்த பொங்கலன்று கொதித்தெழுந்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் மிகப்பெரிய அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு வழிவகை உருவாக்கப்பட்டது. இந்த போராடங்கள் வீரியம் அடைய ஆரம்பித்தவுடன், மத்திய அரசு ஜல்லிக்கட்டு அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. பின்னர், தமிழக அரசும் பேரவைக்கூட்டத்தில் அவசர சட்டம் கொண்டுவர கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
ஆனால், கடந்த வாரம் இந்த அவசர சட்டம் வெளியாகுமா? கவர்னர் வித்யாசாகர் ராவ் கையெழுத்திடுவாரா? என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் சற்று தடுமாற்றத்தில் இருந்தது யாருக்காவது தெரியுமா? அந்த சமயத்தில் தமிழக அரசே ஆடிப்போயிருந்தது.
ஏனென்றால், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் கவர்னர் கையெழுத்திட தயங்கியதுதான் காரணமாம். அவசர சட்டம் உடனே கையெழுத்தாகிவிடும் என்று போராட்டக்காரர்களிடம் முதல்வரும், அதிகாரிகளும் கூறினார்கள். ஆனால் கவர்னர் கையெழுத்திட தயங்குவதால் இது என்ன புதுப் பிரச்னை என தலையைப் பிய்த்துக் கொண்டனராம்.
ஏன் கவர்னர் தயங்கினார்?
கவர்னர் வித்யாசாகர் ராவ் ஆலோசித்த ஒருவர், ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்தில் தயவுசெய்து கையெழுத்திட வேண்டாம். சட்ட ரீதியான பிரச்னைகளை உங்களுக்கு ஏற்படுத்தும் என அந்த பிரமுகர் ஆலோசனை கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையை கூறியது இன்னொரு மாநில கவர்னர் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த ஆலோசனை கூறிய கவர்னருக்கும் தமிழகத்துக்கும் தொடர்புள்ளதுதான் மிக அதிர்ச்சியான செய்தி. இதனையடுத்து, இந்த தகவல் தமிழக அரசின் சார்பில் டெல்லிக்கு தகவல் பறந்தது.
உடனே அங்கிருந்து கவர்னருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாம். அதில், ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் தர, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமரே உறுதியளித்த பின், நீங்கள் கையெழுத்து போட தயங்குவது சரியல்ல என்று கூறப்பட்டதாம். அதற்கு பிறகுதான்  அவசர சட்டத்தில் கையெழுத்திட்டாராம் கவர்னர் என தகவல் வெளியாகியுள்ளது.  லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக