ஞாயிறு, 29 ஜனவரி, 2017

கருத்துகணிப்பில் அதிமுக மூன்றாவது ? உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்கு சசிவந்தால் டெபாசிட் காலி ?

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடத்திய, 'சர்வே' முடிவுகளால், சசிகலா தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. அதில், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறையும் என கூறப்பட்டுள்ளதால், அவரது ஆதரவு வட்டாரம் கலக்கம் அடைந்துள்ளது. மேலும், தொண்டர்களிடத்திலும், பொது மக்களிடத்தி லும், முதல்வர் பன்னீருக்கு தான் ஆதரவு அதிகம் என்பதால், பிரசார களமிறங்கவும், சசிகலா தயங்குவதாக கூறப்படுகிறது.< முதல்வர் ஜெயலலிதா மறைவால், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்றார். அதற்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் தவிர, மற்றவர்களிடம் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, அடிமட்ட தொண்டர்கள், சசிகலா போஸ்டரை கிழித்தும், மூத்த நிர்வாகிகளை புறக்கணித்தும், எதிர்ப்பை காட்டுகின்றனர். இருப்பினும், சசிகலாவை முதல்வராக்க, அவரது உறவினர்கள் காய் நகர்த்தி வருகின்ற னர். அதற்கு முன், உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து, சசிகலா உறவினர்கள், ரகசிய சர்வே நடத்தியுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியே, மாநகராட்சி, நகராட்சிகளில் அதிக இடங்களை பிடிப்பது வழக்கம். ஆனால்,
சர்வே முடிவில், பெரும் பின்னடைவு ஏற்படும் என்ற தகவல் கூறப்பட்டதால், சசிகலா உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.   அந்த 75 நாளும் சதி குரூப்பு வெச்சி செஞ்சப்போ கூட இருந்து குழி பறிச்ச குரூப்பு தானே இவரும்.. இந்தாளு மட்டும் எப்படி திடீருன்னு நல்லவனாயிட்டான்.....


இது குறித்து, சர்வேயில் ஈடுபட்ட ஒருவர் கூறியதாவது:

ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சி, உள்ளாட்சி அமைப்புகளில், அதிக இடங்களை பிடித்தால் தான், தொண்டர்கள் கட்சி பணிகளில் மும் முரமாக ஈடுபடுவர். ஜெயலலிதா உயிரோடு இருந்தால், ஊராட்சி முதல், மாநகராட்சி வரை, அ.தி.மு.க., அதிக இடங்களை பிடிக்கும்.
தற்போது, அவர் இல்லாத நிலையில், சசிகலா தலைமையில் நடக்கப் போகும், உள்ளாட்சி
தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி எப்படி உள்ளது என, சர்வே நடத்த முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக, மாநகராட்சிகளில் ஆய்வு செய்ய திட்டமிட்டு, சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம் ஆகிய மாநகராட்சிகளில், ஜன., 2ல், சர்வேயை துவக்கி னோம். ஒரு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், மக்கள் அதிகம் உள்ள பகுதிகளுக்கு சென்றோம்.

அவர்களிடம், ஆய்வு மாணவர்கள் என தெரி வித்து, உள்ளூர் வளர்ச்சி குறித்து கேட்டோம்; பலர் அரசை விமர்சித்தனர். சசிகலா பற்றி கேள்வி கேட்காத நிலையில், அவர்களாகவே அவரை விமர்சித்தனர். 'உள்ளாட்சி தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்பீர்' என கேட்டோம். அதற்கு, 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டளித்தால், சசிகலாவை ஏற்றுக்கொள்வது போலாகி விடும். அதனால், அந்த கட்சிக்கு ஓட்டு போட மாட்டோம்;உள்ளூர் இளைஞர்களுக்கு போடுவோம்' என்றனர். அதே பதில் தான், கோவை தவிர, மற்ற மாநகராட்சிகளிலும் வந்தது.

'கோவையில், அ.தி.மு.க.,வுக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். உள்ளாட்சி தேர்த லில் அ.தி.மு.க., தோல்வி அடைந்தால், எம்.எல்.ஏ.,க்களால், தொகுதி பணிகளை செய்ய முடியாது; இந்த ஒரே காரணத்துக்காக, அந்த கட்சிக்கு ஓட்டளிப்போம்' என, அந்நகர மக்கள் தெரிவித்தனர்.

அதே போன்ற மனநிலையில் தான், நகராட்சி, பஞ்சாயத்துகளில் உள்ள மக்களும் உள்ளனர். மேலும், அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர் கள், எக்கட்சியையும் சாராத பொது மக்களிடம், சசிகலா தலைமை குறித்து கருத்து கேட்கப் பட்டது. அதில், பன்னீர்செல்வத்தை தான், முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். அவரது ஆட்சி நிர்வாகம் சிறப்பாக இருப்பதாகவும், அவரே பதவியில் தொடர வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சர்வே விபரங்கள், சசிகலா உறவினர்களிடம் வழங்கப்பட்டதும், அவர்கள் கடுமையாக அதிர்ச்சி அடைந்தனர். ஜல்லிக்கட்டு போராட் டத்தை காரணம் காட்டி, 'நாங்கள் கூறும் வரை, அடுத்தகட்ட சர்வே நடத்த வேண்டாம்' எனக் கூறி விட்டனர்.அடிமட்ட நிலவரம் எதிராக இருப்பதாலும், பன்னீருக்கு ஆதரவு அதிகம் காணப்படுவதாலும், சசிகலா தரப்பு கலக்கம் அடைந்துள்ளது.அதனால், பிரசார களமிறங்கு வதா, வேண்டாமா என்பது குறித்து, சசிகலா யோசித்து வருவதாக தெரிகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -  தினமளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக