செவ்வாய், 31 ஜனவரி, 2017

சரவணபவன் ஹோட்டல்ளை இழுத்து மூடிய மாநகராட்சி அதிகாரிகள் 9 கிளைகளும் ஒரேநேரத்தில் மூடுவிழா . பழிவாங்கல்?


Chennai Corporation seals unlicensed Saravana Bhavan Hotelசென்னை: சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் ஹோட்டல் உள்பட அதன் 9 கிளைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக இன்று சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை கேகே நகரில் 1981-ம் ஆண்டு தொடங்கப்பட்டது சரவண பவன் ஹோட்டல். தற்போது இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது சரவண பவன் ஹோட்டல். வழக்கம் போல சரவண பவன் ஹோட்டல் கொடி கட்டிப் பறந்தது. இந்த நிலையில் இன்று திடீரென சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் உள்ள சரவண பவன் கிளைக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் லைசென்ஸ் இல்லாமல் இயங்குவதாக கூறி அதை பொதுமக்கள் முன்னிலையில் சீல் வைத்து இழுத்து மூடினர். அதேபோல் சரவணபவன் ஹோட்டலுக்கு சொந்தமான 9 கிளை ஹோட்டல்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் சரவண பவன் ஹோட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டிருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக