புதன், 11 ஜனவரி, 2017

நாஞ்சில் சம்பத் ... 32 லட்சம் + மகனுக்கு காலேஜ் சீட் ... கோபால் சிஷ்யன்னா சும்மாவா?

பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது மக்களே. இன்னோவா சம்பத் பலே தில்லாலங்கடி வேலையை ஒரு வாரப் பத்திரிக்கை பொளேர் எனப் போட்டு உடைத்து விட்டது. சசியைப் பிடிக்காதது போலவும்,அவரை ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்பது போலவும் பிலிம் காட்டிக் கொண்டிருந்தார். தம்பிதுரை தூது போன போன போது “எனக்கு அர்ஜெண்டா பணம் வேணும் என் பையனுக்கு காலேஜ் பீஸ் கட்ட வழி இல்லை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. வீட்டு செலவுக்கும் பணம் இல்லை. எனக்கு 32 லட்சம் பணமும் , என் பையனுக்கு காலேஜ்ல சொல்லி சேத்துக்க சொல்லணும் ஓகேன்னா நானும் சின்னம்மா என்று அழைக்கிறேன் என்று கூறினாராம். உடனே சசி தரப்புக்கு சொல்லப்பட, பீஸ் வேணாம் என்று கல்லூரி அலறி விட்டது. பணமும் சம்பத்துக்கு கொடுக்கப் பட்டது. வேறு என்ன வேண்டும் என்று கேட்க, லேண்ட் ரோவர் கார் வேண்டும் என்று கேட்டாராம் அதற்கு கார்டன் ஒகே சொல்லிவிட்டதாம். இந்த தகவல் உண்மையான என தெரியவில்லை. சம்பத் தான் தனது திடீர் மாற்றம் குறித்து விரிவாக விளக்க வேண்டும். என்னத்தை சொல்றது மக்களே. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக