புதன், 11 ஜனவரி, 2017

எல்லை ராணுவ வீரர்கள் பட்டினி .. உணவு தரமில்லை .. அதிகாரிகள் மளிகையை களவெடுத்து மக்களுக்கு பாதிவிலையில் விற்கிறார்கள் .. எல்லை ராணுவ வீரரின் பேட்டி


தரம் குறைந்த உணவு தரப்படுவதாக பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தேஜ் பகதூர் தெரிவித்த கருத்து நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் கூறிய குற்றச்சாட்டுக்கள் உண்மை தான் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. பி.எஸ்.எப் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் வாழும் மக்களுக்கு ராணுவ அதிகாரிகள் பாதி விலையில் மளிகை பொருட்களை விற்பனை செய்கின்றனராம். இதனை வாங்கிய மக்களும் பேட்டி அளித்துள்ளனர். இதேபோல் ராணுவத்திற்கு பர்னிச்சர்கள் செய்து தரும் ஒரு நிறுவனத்தின் நிர்வாகியும் ராணுவ அதிகாரிகள் ஊழலில் ஈடுபடுவது உண்மை தான் என கூறியுள்ளார். தங்களிடம் ஆர்டர் செய்யும் பர்னிச்சர்களுக்கு ராணுவ அதிகாரிகள் கமிஷன் வாங்குவார்கள் என்றும் மேலும் தரத்தை குறைத்து கொடுத்தாலும் அதனை வாங்கி கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார், இந்த தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக