புதன், 11 ஜனவரி, 2017

கிரண் பேடி : ஜல்லிகட்டு தமிழர்களின் கலாச்சாரமாக இருந்தாலும் தடைசெய்யப்பட வேண்டும்


சென்னை: தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும் ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, சேலம், காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள், இளைஞர்கள் ஒன்றிணைந்து பேரணி, ஆர்ப்பாட்டம், போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி புதுவை மாநிலத்திலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தை நடத்தினர். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் வலுப்பெற்று வருகிறது.   கிரண் பேடி மீடியாக்களால் பூதாகரமாக உருவாக்கப்பட்ட ஒரு மேட்டுக்குடி போலி பிரமுகர்

இந்த நிலையில் சென்னையில் நடந்த இந்தியா டுடே குழுமத்தின் மாநாட்டில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழர்களின் கலாசாரமாக இருந்தாலும், ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது. காளையை அடக்க முயற்சி செய்யும் போது காளைக்கும், அதைப் பிடிப்பவர்களுக்கும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஜல்லிக்கட்டு சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு வேறு யாரும் தடை செய்யவில்லை என்று அவர் கூறினார் தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக