புதன், 4 ஜனவரி, 2017

திமுக செயல் தலைவர் ஆனார் ஸ்டாலின்.. 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை : திமுக பொதுக்குழு கூட்டத்தில், ஸ்டாலின் செயல் தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திமுக பொதுக்குழு : திமுக பொதுக்குழு கூட்டம் காலை 9 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், திமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். முதன் முறையாக திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்காமல் அக்கட்சியின் பொதுக்குழு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. கூட்டம் துவங்கியதும் மறைந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவர்கள் தவிர சோ, கோ.சி.மணி உள்ளிட்டோருக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. செயல்தலைவர் ஸ்டாலின் : இந்த கூட்டத்தில் தி.மு.க.,வின் செயல்தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும், செயல் தலைவருக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை பொதுச்செயலாளர் அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் வழிமொழிந்தார். பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் வசமே உள்ளது. திமுக தீர்மானங்கள் : திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :* தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்* எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் பிரதமர் மோடியை எதிர்த்து கண்டன தீர்மானம்* மக்களை பாதிக்கும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு வாபஸ் உத்தரவை எதிர்த்து தீர்மானம்* மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக