புதன், 4 ஜனவரி, 2017

திமுக பொதுக்குழுவுக்கு கலைஞர் வரவில்லை .. தொண்டர்கள் ஏமாற்றம்

சென்னை: திமுக பொதுக்குழுவுக்கு கட்சித் தலைவர் கலைஞர்  வருகை தராதது அக்கட்சி நிர்வாகிகளை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை அழைத்துவரை நிர்வாகிகள் கடைசி வரை முயற்சித்தும் பலனில்லாமால் போனது. திமுக பொதுக்குழு சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் 3,000 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  இப்பொதுக் குழுவுக்கு உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் கலைஞரை அழைத்து வரும் முயற்சிகள் நேற்று இரவு முதல் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. இன்று காலையும் இந்த முயற்சிகள் தொடர்ந்தன. ஆனால் கலைஞர் , பொதுக்குழுவில் பங்கேற்கவில்லை. திமுக பொதுச்செயலர் அன்பழகன் தலைமையில் இன்றைய பொதுக்குழு நடைபெற்றது. பொதுக்குழுவில் கருணாநிதி பங்கேற்காதது அக்கட்சி நிர்வாகிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக