வெள்ளி, 30 டிசம்பர், 2016

நிர்மலா பெரியசாமி : லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியால் எத்தனை தற்கொலை? தெரியுமா?

லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி நடத்த வந்த பிறகு, அதில் கலந்துக்கொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா? என்று சொல்வதெல்லாம் நிகழ்ச்சியின் முன்னாள் தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியுள்ளார்.   ஒரு கட்டத்தில் குஷ்பு தலைமையில் இதுபேன்ற குடும்ப பஞ்சாயத்து நிகழ்ச்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இதனால் ராதிகா, ஸ்ரீபிரியா, ரஞ்சினி போன்ற நடிகைகள் கடுமையாக இந்த நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு ;தெரிவித்தனர்.இந்நிலையில் இதுகுறித்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியின் ஆரம்ப தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி கூறியதாவது:-ஜீ தமிழ் சேனலில் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி உருவாக்கத்தின்போது, தொகுப்பாளராக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். அப்படித்தான் அந்த வாய்ப்பு வந்தது. முதல் நிகழ்ச்சியே, டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல இடம் பெற்றது. தொடர்ந்து மக்களிடம் பெரிய அளவில் ரீச் ஆனது. எதையும் சிறப்பாக செய்வது என்னுடைய வழக்கம்.


;இந்த நிகழ்ச்சி மக்களிடையே இன்றும் ஆர்வம் குறையாமல் சென்றுகொண்டிருப்பதில், நான் அமைத்துக்கொடுத்த அடிப்படைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்வேன்.
லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை நடத்த வந்த பிறகு, அதில் கலந்துகொண்ட குடும்பங்களுடன் சம்பந்தப்பட்ட எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்கள் தெரியுமா?
சமீபத்தில் கூட அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியின் பெயர் என்னவோ, 'சொல்வதெல்லாம் உண்மை', 'நிஜங்கள்'. ஆனால், அங்கெல்லாம் உண்மை பேசப்படுகிறதா..?
நிகழ்ச்சியில் கலந்துகொள்பவரை மிரட்டுவதற்கும், சட்டையைப் பிடித்து உலுக்குவதற்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?
;டி.ஆர்.பி ரேட்டிங் என்பது ஆரோக்கியமான போட்டிதான். ஆனால், சமூக அக்கறையும் அதில் வேண்டும். கூடவே, நிகழ்ச்சி நடத்துபவர்கள் தாங்கள் பிரபலமாக வேண்டும் என்பதற்காக, அளவுக்கு மீறிச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக