வெள்ளி, 30 டிசம்பர், 2016

சசிகலாஅதிமுக பொதுச்செயலாளராக (31) நாளை பொறுப்பேற்கிறார்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நாளை (டிச. 31) கட்சி தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடந்த அதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் வரும் ஜன. 2-ல் பொதுச் செயலாளராக அதிமுக அலுவலகத்தி்ல் பொறுப்பேற்பார் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் புத்தாண்டு பிறப்பதற்கு முன்பாக சசிகலா நாளையே (டிச. 31) பொதுச் செயலாளராக பொறுப்பேற்க உள்ளதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. சசிகலா பொறுப்பேற்பதற்கான ஏற்பாடுகளை அதிமுக தலைமை அலுவலகம் மும்முரமாக செய்து வருகிறது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று மாலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்தது. இதில், அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்பி.வேலுமணி மற்றும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும்போது, “சசிகலா விரைவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்பார்” என்றார். சசிகலா இன்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி மற்றும் எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. tamilthehindu


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக