வெள்ளி, 30 டிசம்பர், 2016

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்!!… சசிகலா முதல்வர் வேட்பாளர்!!…

சென்னையில், அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுசெயலாளராக நாளை சசிகலா பொறுப்பேற்காவுள்ளார். இந்நிலையில், சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், சசிகலா கட்சியின் பொதுசெயலாளராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக