புதன், 14 டிசம்பர், 2016

பிரதமர் தலைமறைவு'- ட்விட்டரில் .. தெறிக்கிறது அனல் காற்று

பண மதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரத்தில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ஆவேச குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக, 'பிரதமர் தலைமறைவு' என்ற வாக்கியத்தில், மோடிக்கு எதிராக கலாய்ப்புகளும் காட்டங்களும் நிறைந்த பதிவுகளை ட்விட்டரில் நெட்டிசன்கள் கொட்டித் தீர்த்தனர்.
ரூபாய் நோட்டு நடவடிக்கை எனும் 'ஊழலில்' பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, "பிரதமர் மோடிக்கு என் மீது பயம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே மக்களவையில் நான் வாய் திறந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறார். அவரைப் பற்றிய தகவல் இருக்கிறது. அவற்றை வெளியிட்டால் மோடியின் பிம்பம் சிதறிவிடும்" என்றார். | முழுமையாக வாசிக்க > பிரதமரின் 'தனிப்பட்ட ஊழல்' குறித்த தகவல் என்னிடம் இருக்கிறது: ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு |
இதன் எதிரொலியாக ட்விட்டரில் புதன்கிழமை இந்திய அளவில் ட்ரெண்ட்டிங்கில் வலம் வந்த #PM_Absconding என்ற ஹேஷ்டேகில் கொட்டப்பட்ட கருத்துகளில் 12 பதிவுகள் இங்கே:
> Siona Gogoi: இணையம் எங்கே? பணப் பரிவர்த்தனையில்லா பொருளாதாரத்தை பாஜக விரும்பினால், எல்லாருக்கும் ஸ்மார்ட்போன்களை இலவசமாகத் தரவேண்டும்.
> Rajarshi Dutta: நாடாளுமன்றத்தில் ஜேட்லிக்குப் பின்னால் மோடி ஒளிந்துகொள்கிறார். அவரது ஆகச் சிறந்த பேச்சாற்றல், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஏன் காணாமல் போய்விட்டது?
> tarakki_yafta: நான் இளம் தலைமுறை. எனக்கு அவசரநிலை பற்றி தெரியாது. ஆனால், இந்தியாவில் அதுபோன்றதொரு துயர்மிகு நிலையை என்னால் இப்போது பார்க்க முடிகிறது.
> SimmiAhuja: அவரால் (மோடி) எங்கு வேண்டுமென்றாலும் போக முடியும் என்கிற நிலையில், தமது கட்சி பெரும்பான்மை வகிக்கும் நாடாளுமன்றத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை?
> Rajarshi Dutta: நம் நாடாளுமன்றத்தை வெளிநாட்டுக்கு இடம்பெயர்த்தால் மட்டும் மோடி அவை நடவடிக்கைகளில் தொடர்ந்து பங்கேற்பார்.
> Amol Khodke: சில தொழிலதிபர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு உதவுவதும் ஊழல்தான். இதை பிரதமர் மோடி உணர்வார் என நம்புகிறேன். அதனால்தான் ராகுல் காந்திக்கு அவர் அஞ்சுகிறார்.
> Samraat ‏@SamraatD: கார்ப்பரேட் நிறுவனங்களின் வரிஏய்ப்புகள் மீது வலுவான நவடிக்கை எடுத்தால் மட்டுமே கறுப்புப் பணத்தை பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஒழிக்க முடியும்.
> sanjeev manan: உழைக்கும் வர்க்கத்துக்கு பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தொலைநோக்குப் பார்வை துளியும் இல்லாத இந்த முடிவால் கோடான கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
> Chitra Sarwara: பிரதமர் தலைமறைவு என யாரும் சாடாதீர்கள். அவரிடம் அறிவுபூர்வமானதும் உணர்வுபூர்மானதுமான கேள்விகளையே எம்.பி.க்கள் எழுப்புகின்றனர். அவரால் என்னதான் செய்ய முடியும்?
> Masroor Sohail Khan: போலியாக கண்ணீர் வடித்தும், தன் தாயை வங்கி வரிசையில் நிற்கவைத்தும் அப்பாவி மக்களை பிரதமரால் ஏமாற்ற முடியும். ஆனால், எதிர்க்கட்சிகளை அவரால் ஏமாற்ற முடியாது.
> Suki Magzhan: நாடாளுமன்றத்தில் பிரதமரின் மைக் வேலை செய்யவில்லை. அது, 50 நாட்களுக்குப் பிறகே சரிசெய்யப்படும்.
> Jay Verma: இந்தியாவை பணப் பரிவர்த்தனை இல்லாத பொருளாதராமாக்கிவிட்டார் மோடி. ஏனெனில், இங்கு யாரிடமும் பணமே இல்லை  tamilthehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக