புதன், 14 டிசம்பர், 2016

ஸ்ரீ ரங்கபட்டினத்தில் ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை அண்ணன் வாசுதேவன் நடத்தினார்


ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நேற்று நடத்தினர். தமிழக முதல்–அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 5–ந் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல், மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆன்மா மோட்சம் அடைய கர்நாடகாவில் அவரது உறவினர்கள் இந்து முறைப்படி இறுதிச்சடங்குகளை நடத்தினர். கர்நாடக மாநிலம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் மூத்த மனைவி ஜெயம்மாவின் மகன் தான் இந்த வாசுதேவன். இவர் ஸ்ரீரங்கபட்டணாவில் காவிரி நதிக்கரையில் புரோகிதரால் மறு இறுதிச்சடங்கினை நடத்தினார். இந்த சடங்கில் ஜெயலலிதாவின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.நக்கீரன,இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக