திங்கள், 26 டிசம்பர், 2016

பாகிஸ்தான் சிறையிலிருந்து 220 இந்திய மீனவர்கள் விடுதலை .. நல்லெண்ண அடிப்படையில் முடிவு

கராச்சி: நல்லெண்ண அடிப்படையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்தது. இது தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் கூறியதாவது: பாகிஸ்தானின் மலிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 220 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்கள் அத்துமீறி பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் நுழைந்தாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் இங்கிருந்து ரயில் மூலம் லாகூர் அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கிருந்து வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி 220 இந்திய மீனவர்களை விடுவித்துள்ளோம். இன்னும் சிறையில் 219 இந்திய மீனவர்கள் உள்ளனர் என்றார். யூரி தாக்குதல் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.தினமலர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக