திங்கள், 26 டிசம்பர், 2016

சசிகலா குடும்பத்தில் உறவினர்கள் ஆளாளுக்கு கடும் பதவிப்போட்டி ... கண்றாவி

அ.தி.மு.க.,வின் பொது செயலராக சசிகலாவை தேர்வு செய்யும் முன்னரே, அவரது மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில், தங்களுக்குள், 'பவர் சென்டர்' யார் என்ற, யுத்தம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக, போயஸ் கார்டனில் நடந்த களேபரங்கள் பற்றிய பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. சென்னை, வானகரத்தில், வரும், 29ல் நடைபெறவுள்ள, அ.தி.மு.க., பொதுக்குழு மற்றும் செயற்குழுவில், சசிகலாவை பொதுச் செயலராக தேர்ந்தெடுக்க, அனைத்து மாவட்ட நிர்வாகிகளும்,தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். எதிர்ப்புக்கொடி துாக்குவோரை, மிரட்டியும், பணம் கொடுத்தும் பணியவைக்கும் வேலைகளும் ஜரூராக நடந்து வருகின்றன. அதேநேரத்தில், சசிகலா பொதுச்செயலர் ஆகிவிட்டால், கட்சியையும், ஆட்சியையும் ஆட்டுவிக்கும், 'பவர் சென்டராக யார் இருப்பது' என்ற யுத்தம், மன்னார்குடி சொந்தங்கள் மத்தியில் துவங்கி உள்ளது. சசிகலா தம்பியான, மன்னார்குடி திவாகரனுக் கும், அவரது அக்கா வனிதாமணியின் மகனான,
டி.டி.வி.தினகரனுக்கும் இடையே, வெளிப்படை யாகவே, இந்த விஷயத்தில் மோதல் வெடித் துள்ளது. தினகரனுடன், அவரது மைத்துனரான டாக்டர் வெங்கடேஷும் கைகோர்த்திருப்பதால், மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.



வெறுப்பேற்றியது

ஜெயலலிதா இறுதி அஞ்சலி நிகழ்ச்சியின் போது, அவருடைய உடலை சுற்றி, அ.தி.மு.க., விலிருந்து கட்டம் கட்டப்பட்ட, மன்னார்குடி சொந்தங்கள் நின்றது, கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் வெறுப்பேற்றியது. அது மட்டுமின்றி, 'துக்ளக்' ஆசிரியர் சோ மறைவுக்கு, அஞ்சலி செலுத்த, சசிகலா சென்ற போது, அவருக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி, போலீஸ் அதிகாரிகளை மன்னார்குடி சொந்தங் கள் சில, தொலைபேசியில் மிரட்டியது, அதிகார வட்டாரத்தை அதிர வைத்தது.

ஜெ., மறைந்த அன்றே, கட்சியினரையும், அதி காரத்தில் உள்ளோரையும், மன்னார்குடி சொந் தங்கள் மிரட்டத் துவங்கியதால், 'திவாகரனை கொஞ்ச நாட்கள் ஊரில் போய் இரு' என, சசிகலா சொல்லியுள்ளார். ஆனால், கட்சி நிர் வாகிகள், சசிகலாவை சந்திக்க வந்த போது,
அங்கே டாக்டர் வெங்கடேஷ் வந்து நின்றார். அடுத்த சில நாட்களில், டி.டி.வி.தினகரனும் கார்டனுக்குள் நுழைந்து, சசிகலா அருகே நின்று, 'போஸ்' கொடுக்கத் துவங்கினார்.

அடாவடிகள்

அதுமட்டுமின்றி, முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'எதுவாக இருந்தாலும், என் னிடம் பேசுங்கள்' என்றும், தினகரன் கூறியுள் ளார். இந்த விஷயம், திவாகரன் காதுக்கு எட்டிய தும், அவர் மன்னார்குடியில் இருந்தபடியே, தினகரனும், வெங்கடேஷும் சேர்ந்து நடத்தும் அதிகார அடாவடிகளை, சசிகலாவுக்கு கடிதமாக எழுதியுள்ளார்.

அதற்குப் போட்டியாக, திவாகரனின் சம்பந்தி யான ஜெயச்சந்திரன், உளவுத்துறையின் முக் கிய பொறுப்பில்நியமிக்கப்பட்டதை, தினகரன் தரப்பினர், சசிக லாவிடம், 'போட்டு' கொடுத் துள்ளனர். அதிகாரம் கைக்குள் வருவதற்கு முன்னரே, இவர்கள் இப்படி ஆட்டம் போட்டும், அதை கண்டும் காணாதது போல, சசிகலா இருந்து வருகிறார்.

இந்தச் சூழலில், டிச., 22ல், திடீரென, போயஸ் கார்டனுக்கு வந்த திவாகரன், சசிகலாவிடம், 'உங்களைப் பார்க்க வரும் எல்லாரிடமும், தினகரன் தன், 'விசிட்டிங் கார்டை' கொடுத்து, தன்னிடம் பேசும்படி சொல்லி அனுப்புகிறார். வெங்கடேஷும், அதிகாரிகளை அழைத்து, எதுவாக இருந்தாலும், தினகரனிடம் பேசுங்கள் என்கிறார்.

'என்னைப் பற்றியும், என் மகன் ஜெய் ஆனந்த் பற்றியும், மீடியாக்களுக்கு போட்டுக் கொடுப்ப தும் இவர்கள் தான்' என, ஆவேசமாக கூறியுள் ளார். திவாகரன், மன்னார்குடியில் இருந்த போது, தினமும் கார்டனுக்கு வந்து சென்ற, தின கரனும், வெங்கடேஷும், அவர் போயஸ் கார்டன் வந்திருக்கும் தகவல் அறிந்ததும், அங்கு வரவில்லை. அவர்கள் வந்திருந்தால், ஒரு குட்டி கலாட்டாவே நடத்திருக்கும் என்கின்றனர், போயஸ் கார்டன் ஊழியர்கள்.

சில நிர்ப்பந்தங்கள் காரணமாக, சசிகலாவின் தலைமையை ஏற்க, அரைகுறை மனதோடு, கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்திருந்தா லும், அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள், பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் அளவுக்கு, சசிகலாவை ஆதரிக்கவோ, அவரின் தலைமையை ஏற்கவோ தயாராக இல்லை. இந்த நிலையில், அ.தி.மு.க.,வின் பவர் சென்ட ராக யார் இருப்பது என்பதில், மன்னார் குடி சொந்தங்கள் இடையே, யுத்தம் துவங்கியிருப் பது, பல்வேறு தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது. 'இவர்களிடம் கட்சியை ஒப்படைத்தால், நிலைமை என்னவாகும்' என, தொண்டர்களும், யுத்தத்தில் இறங்கியிருப்பவர்களால் நெருக்கடிக்கு< ஆளாகியிருக்கும் அதிகாரிகளும் புலம்புகின் றனர். இதற்கிடையில், 29ல் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், பொது செயல ராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட் டாலும், அதை எதிர்த்து, கட்சி நிர்வாகிகள் சிலர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரலாம் என்ற அச்சமும், சசிகலா தரப்பில் நிலவுகிறது. அந்த பயத்தின் காரணமாக, அடிதடி போட்டுக் கொண்டிருக்கும் சொந்தங்களை, 'அய்யா... பொறுங்கய்யா... என் பிழைப்பில் மண்ணை போட்டு விடாதீர்கள்' என, கெஞ்சிக் கொண்டி ருப்பதாகத் தெரிகிறது. 'சசிகலா பதவிக்கு வரும் முன்னரே, இந்த ஆட்டம் போடும் இவர் கள், அவர் பொதுச்செயலர் மற்றும் முதல்வ ராகி விட்டால், தமிழகத் தையே கூறுபோட்டு விற்று விடுவர்' என்கின்றனர், அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள்.

10 பேருக்கு துணைபொது செயலர் பதவி

அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், எதிர்ப்பு இன்றி, சசிகலாவை பொது செயலராக தேர்வு செய்ய, அவரது குடும்பத் தினர், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்ற னர். எதிர்ப்புகளை சமாளிக்க, 10 பேருக்கு, துணை பொதுச் செயலர் பதவிகளை உருவாக்க சசிகலா முடிவு செய்துள்ளார்.

இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:


சசிகலா பொதுச் செயலராக எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. அதனால், பொதுக்குழு கூட்டத் திற்கு, அவர் வரமாட்டார். 'சசிகலா பொதுச் செயலராக வேண்டும்' என, தீர்மானம் நிறை வேற்றி, அவரிடம் வழங்குவது என, ஆலோசிக் கப்பட்டுள்ளது. மேலும், 10 துணை பொதுச் செயலர் பதவிகளை உருவாக்கி, செல்வாக் குள்ள முக்கிய ஜாதியினருக்கு தரபட உள்ளது. இதனால், எதிர்ப்பு குறையும் என, சசிகலா கருதுகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

யார் யாருக்கு பதவி?

* கவுண்டர் சமூகத்திற்கு, கொங்கு மண்டல அமைச்சர்களில் ஒருவர்; வன்னியர் சமூகத்திற்கு, செம்மலை அல்லது சி.வி. சண்முகம்; நாடார் சமூகத்திற்கு, அமைச்சர் பாண்டியராஜன் அல்லது முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் நியமிக்கப்படுவர்
* பிராமணர் சமூகத்தில், மைத்ரேயன் எம்.பி., அல்லது நடராஜன் எம்.எல்.ஏ., அல்லது தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னாள் செயலர், அஸ்பயர் சாமிநாதனர் ஆகியோரில், ஒருவருக்கு பதவி
* நாயுடு, முதலியார், யாதவர், ஆதிதிராவிடர் என, சமுதாயத்திற்கு ஒரு துணைச் செயலர் என, 10 துணைச் செயலர்கள் நியமிக்கப்படுவர். இறுதி முடிவு, ஓரிரு நாளில் தெரிய வரும்.

-நமது சிறப்பு நிருபர்  தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக