ஞாயிறு, 25 டிசம்பர், 2016

1700 கோடியில் துபாய் ஹோட்டல் .. ராம் மோகன ராவுக்கு சொந்தமா அல்லது வெறும் பினாமியா?

ராம மோகன ராவ் மகனுக்கு ரூபாய் 1700 கோடியில் துபாயில் ஹோட்டல் இருப்பதாக தகவல்? தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன் விவேக், ராமமோகன ராவ் உறவினர்கள், விவேக் நண்பர் அமலநாதன் வீடுகளிலும், தலைமைச் செயலகத்தில் ராம மோகன ராவ் பணியாற்றி வந்த அலுவலகம் உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை மேற்கொண்டர். சோதனையில் சிக்கிய ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். மேலும், அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ராம மோகன ராவ் சென்னை அருகே போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நெஞ்சுவலி எனக் கூறி சேர்ந்துவிட்டார்.
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் சேர்ந்த ராமமோகனராவுக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றும், மன அழுத்ததால் ராவ் உடல்நலத்தில் சிறிய பாதிப்பு என மருத்துவ வட்டாரங்ள் தகவல் தெரிவித்ததும், ஐ.சி.யூ.வில் உள்ள ராம மோகன ராவை மத்திய உளவுத்துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில் ராம மோகன ராவ் மகனுக்கு ரூபாய் 1700 கோடியில் துபாயில் ஹோட்டல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஹோட்டல் குறித்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. துபாய் ஹோட்டல் விவகாரத்தில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நீள்கிறது நக்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக