வியாழன், 17 நவம்பர், 2016

பெண்கள் தைரியமா வரவேண்டிய PUB! நானும் எத்தனை நாள்தான் நல்லவளாயே நடிக்கிறது?

‘நைட்லைஃப்’ நக்‌ஷத்ரா
பெரிய பெரிய அனுபவங்கள் எல்லாம் சின்னதாக முயற்சி செஞ்சு பார்க்கலாமேன்னுதான் ஆரம்பமாகும். வீட்ல இருந்து கிளம்பும்போது அப்படித்தான் புதுசா OLA ஷேர் யூஸ் பண்ணிப் பார்க்கலாம்ன்னு தோணுச்சு. கார் புக் பண்ணதும் ரெடியாகி, வீட்டைப் பூட்டிட்டு இறங்கும்போது வடிவேலுவோட பங்கு ஆட்டோதான் ஞாபகம் வந்தது. கோட்டூர்புரம்ல இருந்து R.A.Puram போகணும்னு கார் புக் பண்ணேன். இருங்க, உண்மையைச் சொல்லிடலாம். பேங்க் கியூல நின்னு காசு எடுக்க முடியல. அதனால, OLA Money போட்டு யூஸ் பண்ணிக்கலாம்னு பார்த்தேன். என்னைக்கு பேங்க் கிரவுடு குறையும்னு தெரியாததாலயும், சரி OLA ஷேர் யூஸ் பண்ணலாமேன்னு ஒரு திங்கிங்க்லயும் இந்த வேலையைப் பண்ணேன். நான்தான் முதல் பிக்-அப். கார்ல ஏறுனதுமே இடம் சொல்லிட்டேன். மறந்துட போறாருன்னு ரெண்டு தடவை சொன்னேன்.

கொஞ்ச தூரத்துல இன்னொருத்தர் வந்தார். அவரை முன் சீட்டுல உட்கார வெச்சிட்டார் டிரைவர். நெக்ஸ்ட் சிக்னல்ல இன்னொருத்தர் வந்தப்ப, மேடம் நீங்க முன்சீட்டுக்கு வாங்கன்னு அவர் சொன்னதும் எனக்கு ஷாக். என்ன ஆச்சுன்னு கேட்டா... அவங்க ஜென்ட்ஸ், பின்னாடி உட்கார்ந்துக்கட்டும். நீங்க முன்னாடி வந்துடுங்கன்னு சொன்னார். அப்படி சொன்னதுக்கப்பறமும் நாம, இல்லை பரவால்ல வரச் சொல்லுங்கன்னு சொன்னா, நம்மளை சொசைட்டி எப்படி பார்க்கும்னு தெரியாதா என்ன... சைலண்டா போய் உட்கார்ந்தேன்.

முன் சீட்ல உட்கார்ந்திருந்தப்பவே, புதுசா வந்தவரோட Abercrombie & Fitch Fierce Cologne சென்ட் ஸ்மெல் அப்படியே டார்ச்சர் பண்ணுச்சு. பக்கத்துல உட்கார்ந்திருந்தா கொஞ்ச நேரம் மயக்கத்துலயே இருந்திருக்கலாம். ஆனா, அவ்வளவா ஹேன்ட்சம் இல்லை. அதனால மனசை தேத்திக்கலாம். அந்த OLA ஷேர் மட்டுமில்லை, சத்யதேவ் அவென்யூல இருக்க Social பப் கூட ஃபர்ஸ்ட் அட்டெம்ப்ட் தான். ஒன் ஆஃப் தி பெஸ்ட் Gastro pub இதுதான்னு ஃபிரெண்ட் சொன்னதால, டிரை பண்ணிப் பார்க்கலாமேன்னு போனேன். பட் விஷயம் தெரியுமா, Gastro pub ஆக்சுவலா லண்டன் கல்ச்சர்.
ஆல்கஹால் சேல்ஸ், ஃபுட் சேல்ஸ் தனித்தனியா தான் எல்லா இடத்துலயும் பழக்கப்பட்டது. அப்பறமா, லண்டன்ல இந்த மாதிரியான ஃபுட் & டிரிங்க்ஸ் ஒரே இடத்துல ஆஃபர் பண்ற Gastro pub நிறைய வந்தது. சென்னையில இந்த மாதிரி Gastro pub அதிகமா இருந்தது பிரிட்டீஷ் பிரியட்ல. ஆனா, இப்ப யார் வேண்டும்னாலும் Gastro pub ஓப்பன் பண்ணலாம். அந்த மாதிரி பத்துல ஒரு பப் இதுன்னு நினைச்சுகிட்டு தான் போனேன். ஆனா, உள்ள நுழைஞ்சதுமே நான் இருக்குறது லண்டனா? சென்னையா? அப்படின்னு சின்ன டவுட். சென்னைல பப் 2 டைப் தான் இருக்கு. ஒண்ணு பளீர்ன்னு லைட் போட்டு நம்மளை ஆட வைக்கிறது. இன்னொன்னு மைல்டா லைட் கொடுத்து நம்மளை மிதக்க வைக்கிறது. Social பப் இரண்டுக்கும் சென்டர்ல ஒரு அமேசிங் பப்.

ஏதோ 3 ஸ்டார் ஹோட்டலுக்குள்ள போன மாதிரி ஒரு உணர்வு. இது முக்கியமா பெண்களுக்கான பப்ன்னு சொல்லலாம். ஏதோ இருட்டுக்குள்ள போற மாதிரி ஒரு பயத்துலயே இருக்கவைக்காம, ஒரு கான்ஃபிடண்டோட உள்ளே போய் உட்கார்ந்துக்குற மாதிரியான ஒரு செட்-அப். உட்கார்ந்துக்குறதுன்னு முக்கியமா ஏன் சொல்றேன்னா… அங்கே போட்டிருக்க சேர் தான் அழகு. Woodல செஞ்ச அந்த சேருக்கு 4 கார்னர்லயும் வீல் வெச்சிருக்காங்க. ஆக்சுவலி அது தள்ளி விளையாட்றதுக்கு இல்லை. முன்னாடி பின்னாடி நகர்ந்து உட்கார்ந்துக்க.

எல்லா பக்கமும் லைட் உள்ளே வருது. நைட்ல பக்கத்து கார்டன் லைட்ஸ் உள்ளே வருது. ஒரு பப் அட்மாஸ்பியர் இதைத் தவிர வேற எந்த மாதிரி இருக்கணும் சொல்லுங்க. ஒரு ஃபேஷன் இல்லைன்னா இதெல்லாம் இப்படி செய்யவே முடியாது. நான் போனது சன்டே. இருந்தாலும் கூட்டம் கம்மியா இருந்தது. ஆனா, எல்லா இடத்துலயும் பேரர் எப்பவும் இருந்துகிட்டே இருந்தாங்க. எது கேட்டாலும் உடனே கொண்டு வந்து கொடுத்தது ரொம்பவும் சந்தோஷம். நான் ஜஸ்ட் ஒரு வாட்டர்மில்லன் மொஜிடோ மட்டும்தான் ஆர்டர் பண்ணேன். கொஞ்ச நேரத்துல வேற ஏதாவது சாப்பிடலாம்னு ஆசை வந்ததும் Underbake chocalate cake ஆர்டர் பண்ணேன். ஆனா, அது நாம சாதாரணமா சாப்பிடற chocolate lava cake. ஒருவேளை ஃபுட்ல ஏமாத்துறாங்களோன்னு தோணுச்சு.

Spaghetti bolognese ஆர்டர் பண்ணேன். வாட்டர்மில்லன் மொஜிட்டோ கொஞ்சம் கசப்பும், இனிப்பும் கலந்த மாதிரி இருக்கும். பிட்டர் ஸ்வீட்னஸ்ன்னு சொல்வோம் இல்லையா… அந்த மாதிரி இருக்கும். அதனால Spaghetti bolognese ஆர்டர் பண்ணேன். (நம்ம ஊர் பாஸ்தா தான்) ஆனா, பேரர் கொண்டு வந்து கொடுத்ததும் தான் தெரிஞ்சது, நான் என் டின்னருக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணேன்னு. அவ்வளவு குவாண்டிட்டி எந்த பப்-லயும் கொடுக்க மாட்டாங்க. அப்படி குவாண்டிட்டி கொடுத்தா குவாலிட்டி கம்மியா இருக்கும். அதனால யோசனையோடவே சாப்பிட்டேன்.

ஏற்கனவே சாப்பிட்ட மொஜிட்டோவோட மின்ட் கூட, ஸ்பெகட்டில இருந்த ரெட் ஒயின் கலக்கும்போது ஒரு கெமிக்கல் ரியாக்‌ஷன் உண்டாகி சில்லுன்னு ஒரு ஃபீல் கொடுக்குது. உண்மையாவே அது ஸ்டொமக்குக்குள் இறங்கும்போது ஃபீல் ஆச்சு. அடடா இவ்வளவு டேஸ்டா இருக்கேன்னு, அடுத்த ஸ்பூன் எடுத்ததும் இப்ப மசாலாவோட ரெட் ஒயின் கலந்த அந்த டேஸ்ட். கொஞ்ச நேரம் முன்னாடி தான் மொஜிட்டோ சாப்டப்ப லெமன் டேஸ்ட்Tongueல தனியா தெரிஞ்சது. மிண்ட் டேஸ்ட் Throatல தெரிஞ்சது, வாட்டர்மில்லன் ஸ்மெல் நல்லா ஃபீல் ஆச்சு. அதுகூட போட்டி போட்ற மாதிரி ஸ்பெகட்டி பீஃப், ரெட் ஒயின், சாஸ் எல்லாம் கலந்து ஒவ்வொரு ஸ்பூன்லயும் ஒவ்வொரு டேஸ்ட். இந்த திருப்தி போதாதா, ஒரு வீக்-எண்ட் ஜாலியா செலிப்ரேட் பண்றதுக்கு. ஒரு குடோஸ் சொல்லிட்டு வந்துட்டேன். கண்டிப்பா ஒருநாள் அவளோடவும் போகணும். இங்கே இருட்டு இல்லை. யாரும் எதுவும் பண்ணிட முடியாதுன்னு தைரியம் சொல்லி வரவைக்கணும். எத்தனை நாள்தான் வீட்டுக்குள்ளேயே இருக்குறது.  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக