வியாழன், 17 நவம்பர், 2016

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளை வென்றது

 மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய
பெண்கள் அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று (நவ.16) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 199 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் வேதா கிருஷ்ணமூர்த்தி 71 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியைத் தழுவியது. சிறப்பாக பந்து வீசிய ராஜேஸ்வரி 10 ஓவர்கள் வீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்  minnambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக