வியாழன், 17 நவம்பர், 2016

டெல்லியில் நில அதிர்வு - ரிக்டரில் 4.2 ஆக பதிவு

தலைநகர் டெல்லி, குர்கான் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் வலுவான நில அதிர்வு உணரப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியானா மாநிலத்தின் ரிவாரி மாவட்டத்தின் பாவால் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. நில அதிர்வை உணர்ந்த உடன் நிறைய பேர் டுவிட்டர் வலைதளத்தில் இதனை பதிவு செய்தனர். 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக