ஞாயிறு, 6 நவம்பர், 2016

அப்போலோ ஊழியர்களுக்கு சசிகலா பரிசுகள் வழங்கினார் .. இனிமே அந்த ஊழியருங்கதாய்ன் அதிமுக நிர்வாகிங்களோ?

அப்பல்லோவில் ஜெ. சுயநினைவுடன் இருக்கிறார். அவருக்கு
தேவையானவற்றை அவரே கேட்டுப்பெறுகிறார் என 4ம் தேதி அப்பல்லோவின் உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி பேட்டி கொடுத்த உடன், அப்பல்லோவுக்கு ஒரு லாரியில் பரிசு பொருட்கள் வந்து இறங்கின. அப்பல்லோ உரிமையாளர் பிரதாபி சி.ரெட்டி கொடுத்த பரிசு என சொல்லப்பட்டாலும், தீபாவளி கழித்து இந்த பரிசுப்பொருட்களை வழங்கியது சசிகலாதான். ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ், வார்டுபாய்கள் என அனைவருக்கும் தகுதி வாரியாக பண முடிப்பு , இனிப்பு, பட்டாசு வழங்கப்பட்டது. ஜெ. சுயநினைவுடன் போட்ட உத்தரவின் பேரில் வழங்கப்பட்டதாக சசிகலா வழங்கிய இந்த பரிசுகளை பார்த்து சிரிப்பதா? சந்தோசப்படுவதா? என வித்தியாசமான உணர்வலைகளில் அப்பல்லோ ஊழியர்கள் மிதந்தார்கள் என்கிறது அப்பல்லோ வட்டாரம். - தாமோதரன் பிரகாஷ்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக