ஞாயிறு, 6 நவம்பர், 2016

குஷ்பு நக்மா மோதல்.. ஷரியா பற்றி குஷ்பூ கூறியது சரியா? நக்மா கேள்வி? குஷ்பு அதிரடி பதில்..

காங்கிரசுக்குள் நடிகைகள் குஷ்பு - நக்மா நட்சத்திர பிரபலங்களின் மோதல்
என்பது திரைமறைவு ரகசியமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இது கட்சியினர் மத்தியில் பகிரங்கமாக வெளிப்பட்டது. பேசினார்கள் ராகுல்காந்தி கைதை கண்டித்து வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு வரும் பங்கேற்றார்கள். முன்வரிசையில் அருகருகே அமர்ந்திருந்த குஷ்புவம், நக்மாவும் மனதுக்குள் ஆயிரம் இருந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி நடிப்புடன் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். எவ்வளவு அன்னியோன்யமாக இருக்கிறார்கள்?
இவர்களுக்குள் மோதல் என்பதெல்லாம் கட்டுக் கதையாகத்தான் இருக்கும்! என்று தொண்டர்கள் வெளிப்படையாக பேசிக் கொண்டார்கள். அறிமுக கூட்டம் அந்த போராட்டம் முடிந்ததும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்வதை குஷ்பு தவிர்த்து விட்டார். அதுபற்றி கேள்வி எழுந்தது. ஆனால் திருநாவுக்கரசர் அதை சமாளித்து சமரசம் செய்து வைத்தார்.


அவர் அறிமுக உரை ஆற்றிவிட்டு புறப்பட்டு சென்றதும் மகளிர் அணியினர் மத்தியில் நக்மா பேச தொடங்கினார். சீண்டினார் அப்போது சம்பந்தமே இல்லாமல் குஷ்புவை வம்புக்கு இழுத்து சீண்டினார்.

அவர் பேசும்போது கூறியதாவது:- பொது சிவில் சட்டம் பற்றி பேச குஷ்புவுக்கு எந்த அருகதையும் கிடையாது.
முஸ்லீமான அவர் சினிமாவில் பொட்டு வைத்து நடிப்பதில் தப்பில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் ஏன் பொட்டு வைக்கிறார்? கேட்டால் இந்துவை கல்யாணம் பண்ணியிருக்கேன் என்பார். அப்படின்னா முஸ்லிம் ஷரியத் சட்டம் பற்றி இவர் ஏன் பேச வேண்டும்?

ஷரியத் சட்டம் மனிதன் உருவாக்கியது. குரானில் ‘தலாக்‘ பற்றி இல்லை என்று பேசியிருக்கிறார். அவர் குரானை படிக்கவில்லை. பார்த்து இருக்கவே மாட்டார். தலாக் பற்றி குரானிலும் சொல்லப் பட்டுள்ளது.

காங்கிரசுக்கு எதிரானது காங்கிரஸ் நிலைப்பாட்டுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் குஷ்புவுக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். காலையில் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாராம். மாலையில் மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு வரமாட்டராம். குஷ்புவின் நடவடிக்கை பற்றி கட்சி மேலிடத்தில் தெரிவிப்பேன். இவ்வாறு நக்மா பேசினார்.

குஷ்பு பற்றி நக்மா பொரிந்து தள்ளியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. குஷ்பு நக்மா தொடுத்த தாக்குதலை கேள்விப்பட்டு குஷ்பு குமுறி இருக்கிறார்.

இதுதொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: - மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளாதது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறதே? கும்பலே உள்ளது பதில்:- குஷ்பு என்ன சாப்பிடுகிறாள்? என்ன பேசுகிறாள்? யாருடன் பேசு கிறாள்? என்று என்னைப் பற்றி விமர்சிக்கவே ஒரு கும்பல் இருக்கிறது. நான் அகில இந்திய செயலாளர். எனக்கும் மாநில மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கும் சம்பந்தமே இல்லை என்பது வேறு விசயம்.

கே:- சென்னையில் இருந்தும் நீங்கள் மகளிர் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? அழைப்பு இல்லை ப:- என்னை கூப்பிடவில்லை. அதோடு எனக்கு படப்பிடிப்பு இருந்தது. ஷூட்டிங்கை இடையில் நிறுத்தி விட்டுத்தான் ஆர்ப்பாட்டத்துக்கு வந்தேன். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்று விட்டேன்.

கே:- நக்மா உங்களைப் பற்றி கடுமையாக பேசி இருக்கிறாரே? ப:- நான் கண்ணால் பார்க்கவும் இல்லை. காதால் கேட்கவும் இல்லை. எனவே அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக