திங்கள், 7 நவம்பர், 2016

அழகிரியும் ஸ்டாலினும் கலைஞர் முன்பாக ஒருவரை ஒருவர் நலம் விசாரித்தனர்

திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்திக்க சென்ற அழகிரி அங்கு தம்பி ஸ்டாலினை சந்தித்ததாகவும் அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை பார்த்த கருணாநிதி ஆனந்தத்தில் கண்ணீர் விட்டதாகவும் தகவல்கள் வருகிறது. உடல் நலம் இல்லாமல் கோபாலபுரம் இல்லத்தில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதியை அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி இரண்டு முறை சந்தித்தார். இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் அவரது மணைவியுடன் வந்து சந்தித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரண்டு முறை வந்த போது அங்கு மு.க.ஸ்டாலின் இருக்கவில்லை. இந்த முறை மு.க.ஸ்டாலின் அங்கு இருந்துள்ளார். அப்போது அழகிரியும், ஸ்டாலினும் அருகருகே அமர்ந்திருந்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துள்ளனர். இதனை பார்த்த கருணாநிதி ஆனந்தத்தில் இதை தான் இத்தனை நாளாய் எதிர்பார்த்தேன் என கூறி கண்ணீர் விட்டுள்ளார். ஸ்டாலினும், அழகிரியும் கூட கண்கலங்கினார்களாம்.
இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவுகிறது. நீண்ட நாள் பேசாமல் இருந்த அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்ததால் திமுகவில் அழகிரி தரப்பு சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அழகிரி வெளிநாடு சென்று வந்த பின்னர் அவர் மீண்டும் திமுகவில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. வெப்துனியா.காம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக