புதன், 16 நவம்பர், 2016

6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் ; பெரு நிறுவனங்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் எப்போது மிஸ்டர் மோடி ?

15049808_10154631753129400_133119648_n.jpgஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவித்ததன் மூலம் இந்தியாவில் புரட்சியை தொடங்கியிருக்கிறார் மோடி என்று ஊடகங்கள் பாராட்டி தள்ளிகொண்டு இருக்கின்றன.
அது உண்மையா என்று பார்த்தால், சந்தேகமே ஏற்படுகிறது.
சில கணக்குகளை கீழே பார்க்கலாம்.
இந்திய வங்கிகளில் வராமல் இருக்கும் கடன் தொகை கிட்டத்தட்ட ஆறு லட்சம் கோடிகளை எட்டி இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் உயிர் கிட்டத்தட்ட ஊசலாடி கொண்டிருக்கிறது. மிகப்பெரும் தொகைகளை வங்கிகளுக்கு அளிக்காவிட்டால், வங்கிகள் திவாலாவதை தடுக்க முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது
“கடன் தர நிர்ணய நிறுவனமான (ஒரு நிறு­வ­னத்தின் செயல்­பாடு, நிதி­யா­தாரம் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­களை ஆராய்ந்து, அந்­நி­று­வ­னத்தின் கடன் தகுதி குறித்து, சாத­க­மான அல்­லது பாத­க­மான மதிப்­பீட்டை அளிக்கும் நிறுவனம் ) மூடிஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இந்திய வங்கிகளுக்கு,  ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மூலதனம்  என்பது உடனடித்தேவை”யாக இருப்பதாக, குறிப்பிட்டிருந்தது

சர்வதேச நிறுவனமான மூடீஸ் மட்டுமல்லாமல், இந்தியாவின் ‘அசோசெம்’ மற்றும் பி.டபிள்யு.சி., நிறு­வ­னங்கள் சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஒரு நிறு­வ­னத்தின் கடன் தகுதி குறித்து, தர நிர்­ணய நிறு­வ­னங்கள் அளிக்கும் மதிப்­பீடு மட்­டு­மின்றி, கடன் வழங்­கு­வ­தற்கு முன், அந்­நி­று­வனம் குறித்து, வங்­கி­களும் ஆய்வு நடத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தன.
இதனிடையே கடந்த ஜூலை மாதம், இந்தியாவில் உள்ள 13 பொதுத்துறை வங்கிகளுக்கு 23 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்திருந்தது.
2015 -ம் ஆண்டில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்ட அறிக்கை ஒன்றிலேயே இதனை சூசகமாக குறிப்பிட்டிருந்தார். “அடுத்த நான்கு வருடங்களுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் அளித்தால் மட்டுமே பொதுத்துறை வங்கிகளால் செயல்பட முடியும்” என்று.
வாராக்கடன், பொதுத்துறை வங்கிகளில் ஊசாலாட்டம் ஆகியவற்றை கணக்கிட்டாலே,  கருப்பு பணத்தின் மீதான சர்ஜிக்கள் ஸ்ட்ரைக் என்று சொல்லப்படும் “ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாததை ஆக்கிய” நடவடிக்கை என்பதே, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்கும் ஒரு திட்டம் என்று மட்டும்தானே தோன்றுகிறது. இதன் மூலம் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகரித்து, அந்த வங்கிகளுக்கு வாழ்வழிக்கும் ஒரு திட்டம் என்றும் மட்டும்தானே எண்ண வைக்கிறது.
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவிப்பதை விட வேறு எந்த நடவடிக்கையால், வங்கிகளின் மூலதனத்தை அதிகரித்திருக்க முடியும் என்று யோசித்தால், இதை தவிர வேறு எந்த நடவடிக்கையாலும் இந்திய வங்கிகளை உயிர்ப்பித்திருக்கவே முடியாது என்று திட்டவட்டமாக தோன்றுகிறது.
தான் சேமித்த பணத்தை , வரி கட்டிய பணத்தை பதை பதைக்க கையில் எடுத்து கொண்டு, நீநீநீளமான வரிசையில் நிற்கும் மக்களை பார்த்தால், வங்கிகளுக்கு பணம் கொண்டு வருவதற்கு இதை விட  வேறு எந்த சிறந்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குமே இருந்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
கருப்பு பணத்தை ஒழிக்க ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை ஆக்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாயை அறிமுகப்படுதுவது எதற்க்காக ?
கருப்பு பணத்தை ஒழிக்க ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செல்லாதவை ஆக்கிவிட்டு, இரண்டாயிரம் ரூபாயை அறிமுகப்படுதுவது எதற்க்காக ?  இரண்டாயிரம் ரூபாய் என்பது , கருப்பு பணத்தை அதிகரிக்கவே செய்யும்.
நாட்டு மக்களின் சிருவாட்டு காசை எல்லாம் வங்கிகளில், டெபாசிட் செய்வதற்கான சூழலலை உருவாக்கி, இதன் மூலம் வங்கிகளின் மூலதனத்தை பெருக்கி, யாருக்கு கடன் வழங்க போகிறார்கள் என்பது பற்றி ஏதாவது ஐடியா இருக்கிறதா ?
நமக்கில்லை. பொதுமக்கள் என்பவர்கள் பணத்தை இருப்பு வைக்க செல்லும் வரிசையில் நிற்பவர்கள். பணத்தை கடனாக பெரும் வரிசையில் நிற்கப் போகும் மாரியாதைக்குரியவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா ?
இவர்கள்தான்.
( அடைப்பு குறிக்குள் இருக்கும் பணமென்பது, இந்த பெரும் முதலாளிகள் பல்வேறு வங்கிகளில் கடனாக பெற்று விட்டு, இன்னமும் திருப்பி செலுத்தாத பல ஆயிரம் கோடி பணம் )
10.GVK ரெட்டி  (GVK Group) (33933 Crores)
9.வேணுகோபால் டூட்  (Videocon Group) (45405 Crores)
8.மதுசூதன் ராவ் (Lanco Group) (47102 Crores)
7.G M ராவ்  (GMR Group) (47976 Crores)
6.சஜ்ஜன் ஜிண்டால் (JSW Group) (58171 Crores)
5.மனோஜ் கோர் r (Jaypee Group) (75163 Crores)
4.கவுதம் அதானி (Adani Group) (96031 Crores)
3.சஷி ரூஜா  & ரவி ரூஜா  (Essar Group) (1,01000 Crores or Rs 1.01 trillion)
2.அனில் அகர்வால்  (The Vedanta Group) (1,03000 Crores or 1.03 trillion)
இறுதியும் முதலுமாக….
1.அனில் அம்பானி (Reliance Group)(1,25,000 Crores or Rs 1.25 trillion)
அரசாங்கம் என்பது பொது மக்களின் சட்டைப் பைகளில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தி இருக்கிறது. மக்கள் எல்லாரும் பரிதவித்து தெருவெங்கும் திரிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் முதலாளித்துவம்.
Courtesy: jantakareporter.com -ல் வந்த “Real reason why Modi govt has carried out surgical strike on your pockets” என்ற கட்டுரையின் தமிழாக்கம்  thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக