புதன், 16 நவம்பர், 2016

சூரத் தொழிலதிபர் ரூ. 6000 கோடி ஒப்படைத்த செய்தி பொய்! மோடிக்கு தங்க கோர்ட் பரிசளித்த அல்லக்கை இவன்தான்~

குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர
வியாபாரியான இவர், அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பில் பிரதமர் மோடி அணிந்திருந்த சூட்டை பரிசளித்தவர். ஒவ்வொரு தீபாவளியின் போதும் தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து செய்தியில் இடம்பெறுபவர். இந்நிலையில் பிரதமரின் ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பின் பின்னணியில் தன்னிடமிருந்த கணக்கில் வராத ரூ.6 ஆயிரம் கோடியை அரசிடம் ஒப்படைத்ததாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது. இதை ஊடகங்களும் செய்தியாக்கின. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என லால்ஜிபாய் விளக்கம் அளித்திருக்கிறார். thetimestamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக