மதுரை
பழங்காநத்தூரில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாளராக இருப்பவர்
மாரிமுத்து. பேருந்து நடத்துனர்கள் கொடுக்கும் கலெக்ஷன் தொகை
ஒருநாளைக்கு 10 முதல் 13 லட்சம் வரும். நடத்துனர்கள் 100, 50, 20, 10,
சில்லறை என கொடுக்கிறார்கள். ஆனால், பொன்மேனியில் உள்ள ஐஓபி வங்கியில்
செலுத்தும்போது 500, 1000 மாக செலுத்துகிறார் மாரிமுத்து. இதை
தெரிந்துகொண்ட நடத்துனர்கள், ஓட்டுநர்கள் அமைச்சர் செல்லூர்ராஜூக்கு இந்த
மாரிமுத்து வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்குத்தான் பண மாற்றம் செய்து
தருவதாக குற்றம் சாட்டி, இன்று மாலையில் பேருந்தை இயக்கமாட்டோம் என்று
கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என்று மாரிமுத்து கேட்டுக்கொண்டதற்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டன- மதுரை ஷாகுல் நக்கீரன்.இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக