ஞாயிறு, 13 நவம்பர், 2016

ரூ.570 கோடி எங்கே.. பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கேள்வி!!

புதுச்சேரி மாநிலத்தில், நெல்லித்தோப்பு தொகுதியில் இடைத்தேர்தல் வருவதையொட்டி அங்கு முதல்வர் நாராயணசாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: திருப்பூரில் கன்டெய்னரில் பிடிப்பட்ட ரூ.570 கோடியை பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு பொதுமக்களின் பணத்தை செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இந்த பணத்திற்கு இன்னும் விடை தெரியவில்லை. கருப்பு பணம் ஒழிய வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் வரவேற்கிறது. ஆனால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்காமல் இந்தியாவில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது பொதுமக்களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.முகநூல் பதிவு லிவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக