சனி, 12 நவம்பர், 2016

500,1000 ரூபாய் விவகாரம் இரு வாரங்களுக்கு முன்பே பாஜகவினருக்கு தெரியும். ஆதாரம் இதோ!

Journalist broke story about currency demonetisation a fortnight back கான்பூர்: பிரதமர் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் ரகசியத்தை தெரிந்து கொண்டு அவர் அறிவிப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பே ஒரு பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் பிரஜேஷ் துபே. தைனிக் ஜாக்ரன் இந்தி நாளிதழில் பணியாற்றி வருகிறார். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு புதிதாக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும் என கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதியே செய்தி வெளியிட்டுள்ளார். 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து பிரதமர் மோடியே நவம்பர் 8ம் தேதி இரவு 8 மணி 20 நிமிடங்களுக்கு தான் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் பிரஜேஷ் 13 நாட்களுக்கு முன்பே மோடியின் ரகசியத்தை ஊர், உலகிற்கு எல்லாம் தெரிவித்துவிட்டார்.
நம்பத் தகுந்த நபர்களிடம் இருந்து தனக்கு தகவல் கிடைத்து செய்தி வெளியிட்டதாகவும், அந்த நபர்களின் பெயர்களை தெரிவிப்பது பத்திரிகை தர்மம் அல்ல என்றும் பிரஜேஷ் தெரிவித்துள்ளார்.

நான் செய்தி வெளியிட்ட பிறகு அதை உறுதி செய்வது போன்று மோடி அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்கிறார் பிரஜேஷ். மோடியின் அறிவிப்பு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டது என்று கூறிய நிலையில் பிரஜேஷுக்கு முன்பே தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக