சனி, 12 நவம்பர், 2016

அழகிரி கலைஞர் சந்திப்பு ..தஞ்சை, அரவக்குறிச்சி,திருப்பரங்குன்றம் இடைதேர்தல் பற்றியும் பேசினார்கள்

ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் மு.க.அழகிரி, மூன்று முறை கோபாலபுரம் வந்து கருணாநிதியை நேரில் சந்தித்து உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். நேற்று (11/11/2016) மீண்டும் கோபாலபுரம் வந்த அழகிரி, கருணாநிதியை சந்தித்து பேசினார். அண்மையில் வெளிநாடு சென்றிருந்த மு.க.அழகிரி, நேற்று சென்னை திரும்பினார். பின்னர் உடனடியாக, கோபாலபுரம் சென்ற அழகிரி, அங்கு கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதோடு, குடும்ப விஷயங்கள் குறித்தும் பேசிவிட்டு, தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நிலவரம் குறித்தும் பேசி ஆலோசனை செய்தார். மேலும், மூன்று தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் தனது ஆதரவாளர்கள் யாரும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள் என்று கருணாநிதியிடம் உறுதியளித்திருக்கிறார்.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக இருந்த திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க, இத்துடன் நான்காவது முறையாக கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து சென்றிருக்கிறார் அழகிரி. இது திமுக-வினரிடையே ஒரு சில யூகங்களை எழுப்பி இருக்கிறது. ஒவ்வொரு சந்திப்பின்போதும் நலன் விசாரித்ததோடு, கட்சி விவகாரங்கள் பற்றியும் கலந்து பேசி இருக்கிறார். அநேகமாக, தமிழக இடைத்தேர்தலுக்குப் பிறகு மு.க.அழகிரி மீண்டும் திமுக-வில் இணைத்துக் கொள்ளப்படலாம் என்று கட்சி வட்டாரத்தில் தகவல் கசிவதாகத் தெரிவிக்கின்றனர் விவரமறிந்தவர்கள். minambalam.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக