செவ்வாய், 25 அக்டோபர், 2016

திருமாவளவன் பங்கேற்கவில்லை .. அனைத்துகட்சி கூட்டத்தில் பங்கேற்க திருமா மறுப்பு

திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலையில்
இருப்பதாக திருமாவளவன் சற்றுமுன் மு,க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். திமுக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்ததே திருமாவளவன் அவர்கள்தான். நேற்று நடந்த விசிக கூட்டத்தில் கூட பெரும்பாலானோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கருத்து தெரிவித்ததாக அதன் சார்பில் ஊடகங்களில் பேசியவர்கள் தெரிவித்தனர். நான் கடந்த மூன்று நாட்களாக அரசியல் நலன்களை கடந்து தமிழக உணர்வுகளுக்காக திருமா நிற்பார் என்றே ஊடகங்களில் பேசி வந்தேன். திருமாவின் செயல்பாடுகளும் அதையே பிரதிபலித்தன,

ஆனால் வைகோ தன்னிசையாக எடுத்த முடிவை திருமா ஏற்க வேண்டிய நிர்பந்தம் என்ன? அவர் தன் சொந்த வார்த்தைக்குக் கூட பொறுப்பேற்க முடியாத நிலையில் வைகோவின் பிடியில் இருக்கிறாரா? வைகோ திருமாவையும் தன்னைப் போல மாற்றிவிட்டார் என்பதுதான் அவலம்.
Abdul Hameed Sheik Mohamed

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக