செவ்வாய், 25 அக்டோபர், 2016

கலைஞர் உடல்நல குறைவு .. ஒவ்வாமை .. வீட்டில் இருந்தே சிகிச்சை

தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஒவ்வாமை காரணமாக ஓய்வில் இருப்பதால் பார்வையாளர்கள் அவரைக் காண வருவதை தவிர்க்குமாறு கட்சித் தலைமையகம் தெரிவித்துள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில தினங்களாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் வீட்டிற்கே வந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "​தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த சில நாட்களாக, வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே பார்வையாளர்கள் அவரைக் காண வருவதைத் தவிர்த்து, ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக