செவ்வாய், 25 அக்டோபர், 2016

இஸ்லாமிய பெண்கள் கல்வி கிடைக்கும் முன்பே கர்ப்பம் ... வேகவேகமாக தலாக் தலாக் தலாக் .. வாசகியின் காட்டமான கருத்து

VIJAYA CHOUMIAN - SCOTLAND,யுனைடெட் கிங்டம் 24
இதை எனது அன்புக்குரிய இஸ்லாமிய அங்கிள்ஸும் சகோதரர்களும் தான் சரி செய்ய வேண்டும். புரட்சி என்பது அவர்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும். அவர்களுக்கு மற்ற மதத்தினர் ஆதரவு நிச்சயம் உண்டு. அபு லுக்மான், காசிமணி போன்ற இஸ்லாத்தில் அதீத பற்றுக் கொண்டோர் அங்கு இளம் பெண்கள் படும் பாட்டை கருதி எங்கு தவறுள்ளது என்று ஆய்ந்து ஏழை சகோதரிகளுக்கு உதவ முன்வரவேண்டும். இஸ்லாத்திலேயே சில அமைப்புகள் உருவாகி அவர்கள் இது போன்ற சமூகக் கொடுமைகளை எதிர்க்கிறார்கள். நம் நாடு இஸ்லாத்திற்கு என்று ஒரு தனி சட்டம் வைத்திருப்பதால், இந்திய முஸ்லீம் பெண் தன்னை எதோ வெளிநாட்டில் முஸ்லீம் மத ஆட்சி நடக்கும் நாட்டில் பிறந்ததாக எண்ணி வேதனை பட வேண்டி உள்ளது.
மார்க்கத்தினர் நன்கு சிந்திக்க வேணும். இந்த நிலை நீடித்தால், அந்த மதத்தினர் தொடர்ந்து பெண்களை இம்சித்தால், உடனடி எதிர்காலத்தில் இரண்டு விதமான செயல்கள் நடைபெற சாத்தியக் கூறுகள் உள்ளன. ஒன்று திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று முடிவு எடுப்பது அல்லது இரண்டாவதாக மாற்று மதத்தினரை திருமணம் செய்து கொள்ளும் முடிவு என்று அமையும். இரண்டுமே உங்களுக்கு தான் நல்லதில்லை. இன்று தான் தினமலரில் செய்தி நம் மோடி ஜி அவர்கள் முஸ்லீம் சகோதரிகளுக்காக கண்ணீர் சிந்தினார் கவலை கொண்டார். அதே தேதியில் இந்த முஸ்லீம் அவளை பெண்ணின் நிலைமையை பாருங்கள். கல்வி கிடைக்கும் முன்பே கர்ப்பமாகி விடவேண்டிய சூழல். இளம் பிராயத்து திருமணம், மகப்பேறு நல்லதல்ல என்று எப்படி கூறினாலும், அங்குள்ள இளைஞர்கள் கிழடுகளின் ஆசைக்காக பெண் சீரழிக்கப் படுகிறாள். பூப்பூ எய்த நாளிலேயே முஸ்லீம் பெண் வாலிப பெண்ணாக திருமணத்திற்கு வயது வந்தவளாக ஏற்றுக் கொள்கிறது அந்த மதம். இது மிகவும் தவறு. சேலம் அருகில் 17 வயது 11 மாதம் கடந்து 18 வயது கிடைக்காத பெண்ணுக்கு திருமணம் செய்வதை அறிந்து அந்த கிராமத்து மக்கள் அல்லது அந்த பெண்ணின் வகுப்புத் தோழிகளே கூட போலீசுக்கு தகவல் தர நிறைய திருமணங்கள் சிறார் திருமணங்கள் தடுக்கப் பட்டிருக்கின்றன. இளம் பருவ மங்கைகள் உடல் இச்சைக்கு மிகவும் ருசியானவர்கள் (கேவலமான புத்தி) என்று எண்ணும் அந்த ஆண்கள் அவர்களை திருமணம் என்னும் செயலால் கற்பழிக்கிறார்கள். 18 வயது பெண்ணை எந்த முறையிலும் இணைவது தவறு தான், உலகம் முழுதும் இது தான் நியதி. ஆயிரம் காலத்து அரதப் பழசான விதிகளை காரணம் காட்டி எதோ செய்வது கண்டிக்கத்தக்கதாக தெரியவில்லையா. நான் பெண்ணுக்கு எதிரான கொடுமையை தான் எதிர்க்கிறேன். மற்றபடி எனக்கு அல்லாஹ் மிகப் பெரியவர் தான். நானும் உங்களுடன் இணைந்து அல்லாஹ்வை வணங்குகிறேன். ஆனால் என் பிரார்த்தனை வேறு விதமானது. எந்த விதத்திலும் இறைவா பெண்களை துன்புறுத்த விடாதே. அந்த ஆண்களின் மனதை திருத்து. எனக்கு கிடைத்திருக்கின்ற சுதந்திர சுக வாழ்வு எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. என் பிரார்த்தனைக்கு செவி மறுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு நூறு முறை கூட வணங்குவேன். என்ன செய்வது, பெண்கள் எங்கு காமத் பொருளாகவும், அடிமைகளாகவும் நடத்தப் படுகிறார்கள். கல்வியறிவு பெரும் முன்னரே திருமணம் குடும்ப வாழ்க்கைக்கு தள்ளப் படுகிறாள். மாநிலம் விட்டு மாநிலம் மாநகர் விட்டு மாநகர் மைகிரேட் ஆகவேண்டும் அந்த சகோதரிகள். அதனால் அவர்கள் வாழ்வு சிறக்கும். ஒரே இடத்திலேயே அடக்கி வைக்கப் பட்டிருப்பதால், அவர்களால் முன்னேற முடியவில்லை. குஷ்பு கூறியது ஒரு பேட்டியில், நான் மட்டும் அல்லாஹ்வின் கிருபையால் தமிழகம் வந்திருக்க வில்லை என்றால் அல்லது தைரியமாக சினிமாவிற்கு வந்திருக்க வில்லை என்றால் எட்டாம் வகுப்புடன் என் வாழ்வு மங்கி இருக்கும். என் பெற்றோர் மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்தில் ஒரு முஸ்லீம் கணவனுக்கு மூன்றொடு நான்காக என்னை சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுத்திருப்பார்கள், 36 வயதில் நான் பாட்டி ஆகிருப்பேன் என்று. அந்த சமுதாயத்தின் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டிய பேட்டி அது. சிறைக்கதவை விட்டு பரந்து வெளிவர முடியவில்லை அந்த பெண்களுக்கு. சாதி என்பது முற்றிலும் அழிந்து போனதற்கு ராஜாராம் மோகன் ராய் முயற்சி பெரிது. தன் சொந்த அண்ணிக்கு நிகழ்ந்த கொடுமை அவள் விருப்பமில்லாமல் சிதை நெருப்பில் தள்ளிக் கொன்றார்கள். அவர் மனம் பாதித்தது, போராடினார். அவர் கருத்தை பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர் சாதாரண குடியானவன். ஆகையால் அது சாத்திய மாகாது. அந்த நாளில் மாகாண கவர்னர் அவருக்கு ஒரு ஏற்பாடு செய்து ஒரு குறு நில மன்னராக்கி அவரை ராஜா வாக்கினார். ராஜாவின் கருத்து பின்னர் பிரிட்டிஷ் பாராளுமன்றம் ஏங்கியது, சதி தடுப்பு சட்டம் நிறைவேறியது. இதை பெண்கள் எதிர்த்திருந்தால் ஒன்றும் நடந்திருக்காது. அதுபோலத்தான் மற்ற மதத்தினர் என்ன செய்ய முயன்றாலும் ஒன்றும் நடக்காது. முஸ்லீம் மதத்திலிருந்து ஆண்கள் நிறைய பேர் முன் வரவேண்டும் இது போன்ற கொடுமைகளை எதிர்க்க. அப்போது நிறைய ஆதரவு பெருகும். நல்லது நடக்கும்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக