சனி, 1 அக்டோபர், 2016

பீகார் மதுவிலக்கு உயர் நீதிமன்றம் ரத்து செய்தது .. நிதிஷ் அரசுக்கு பின்னடைவு ?

பாட்னா,; பீகாரில் மதுவிலக்கு அரசாணையை ரத்து செய்து, ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது. இது நிதிஷ் குமார் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மது விலக்கு< பீகார் மாநிலத்தில் 2015 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, முழுமையான மதுவிலக்கை கொண்டுவருவோம் என வாக்குறுதி அளித்து நிதிஷ் குமார் தலைமையிலான மதசார்பற்ற மகா கூட்டணி ஆட்சியை பிடித்தது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நிதிஷ் குமார் அரசு, கடந்த ஏப்ரல் மாதம் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது. இதன்படி உள்நாட்டு மதுபானங்கள் தயாரிப்பு, விற்பனை, மதுபானங்கள் குடித்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. வழக்கு


இந்த நிலையில், மதுவிலக்கு சட்டத்துக்கு எதிராக மதுபான விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சில தனிநபர்கள் பீகார் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை தற்காலிக தலைமை நீதிபதி இக்பால் அன்சாரி, நவ்நிதி பிரசாத் சிங் ஆகியோரை கொண்ட அமர்வு விசாரித்தது.

கடந்த மே மாதம் 20–ந்தேதி, விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை ரத்து என தீர்ப்பு

இந்த வழக்கில், ‘‘நிதிஷ் குமார் அரசு கொண்டு வந்த மதுவிலக்கு சட்ட அரசாணை (ஏப்ரல் 5–ந் தேதி பிறப்பித்தது) சட்டவிரோதமானது, இது அரசியல் சாசனத்தின்படி அமைந்தது அல்ல. எனவே அது அமல்படுத்த தகுந்தது அல்ல’’ என்று கூறி, ரத்து செய்து நேற்று தற்காலிக தலைமை நீதிபதி இக்பால் அன்சாரி, நவ்நிதி பிரசாத் சிங் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு, நிதிஷ்குமார் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

நாளை அரசாணை வெளியிடப்பட உள்ள திருத்தப்பட்ட மதுவிலக்கு சட்டத்தின் நிலை என்னவாகும் என கூடுதல் அட்வகேட் ஜெனரல் லலித் கிஷோரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ‘‘ஏப்ரல் 5–ந் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற விவரங்களை ஐகோர்ட்டு உத்தரவை முழுமையாகப் படித்த பின்னர்தான் கூற இயலும்’’ என கூறினார்.

கலால் துறை கமிஷனர் ஏ.கே. தாஸ், ‘‘நான் கோர்ட்டு உத்தரவை வாசித்து பார்க்காத நிலையில் இப்போது கருத்து எதுவும் கூற முடியாது’’ என்று தெரிவித்தார்  dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக