சனி, 1 அக்டோபர், 2016

காவிரி... சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து தேவகவுடா உண்ணாவிரதம்

பெங்களூரு : காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக சுப்ரீம்
கோர்ட் பிறப்பித்த உத்தவை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரத போராட்டம் போராட்டத்தை துவக்கி உள்ளார்.காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற உத்தரவை திருத்தம் செய்ய வேண்டும் என கர்நாடக அரசும், அதற்கு எதிராக தமிழக அரசும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுக்களையும், இரு மாநில அரசுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையையும் சுப்ரீம் கோர்ட் நேற்று விசாரித்தது. பின்னர், தமிழகத்திற்கு அக்டோபர் 6ம் தேதி வரை தினமும் 6000 கனஅடி நீர் திறந்து விட வேண்டும் எனவும், மீண்டும் மீண்டும் கோர்ட்டிற்கு வருவது சரியானதல்ல எனவும் கர்நாடக அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தது.
இந்த உத்தரவு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று கூட்டி ஆலோசித்த கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து உண்ணா விரத போராட்டத்தை துவக்கி உள்ளார். பெங்களூரு, விதான் சவுதா பகுதியில் உள்ள காந்தி சிலையின் கீழ், தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து அவர் போராட்டம் நடத்தி வருகிறார்  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக