சனி, 1 அக்டோபர், 2016

கவர்னர் வித்யாசாகர் ராவ் அப்போலோ சென்றார் .. முதல்வரை பார்ப்பார் என்று வதந்தி?

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22--ந் தேதி ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிய தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். அதே போல் இன்றும் ஏராளமான பிரமுகர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்றனர். இந்நிலையில்  முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய அப்பல்லோ மருத்துவமனைக்கு வித்யாசாகர் ராவ் சென்றார். அங்கு ஜெயலலிதாவின் உடல் நலம் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிகிறார். கவர்னர் வருகையை தொடர்ந்து கமிஷ்னர் ஜார்ஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக