ஞாயிறு, 30 அக்டோபர், 2016

ரெட்டை மலை சீனிவாசன் ..மறைக்கபட்ட ஒரு வரலாற்று நாயகனின் அர்ப்பணிப்பு

Nelson Mondela Manoharan: முகநூல் பதிவு :
" நானும் டாக்டர் அம்பேத்காரும் நகமும்சதையாக இருந்து தலித்களுக்குபாடுபட்டோம் "இதர சமூகத்தவர்களும், சமயத்தவர்களும்நம்மை முன்னேற்ற வந்ததாக சொல்வதுஅவர்களின் சுயநலமாகும். நம்முடையஇடைவிடாத சுயமுயற்சியால் முன்னேறிவந்து கொண்டிருக்கிறோம் " -ரெட்டமலை சீனிவாசன. செனைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டுவட்டத்தில் கொளியாலம் என்னும்கிராமத்தில், ரெட்டமலை ஆதிநாயகிதம்பதியருக்கு மகனாக ஜூலை மாதம் 7, 1859 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியஅரசியலுக்கு காந்தி வருவதற்கு முன்பே, இமண்ணில் தீண்டாமை, சாத்தியகொடுமைகளை எதிர்த்து போராடியவர்
1887 ஆம் ஆண்டு அரங்க நாயகியை மணந்தார்

18891 ஆம் ஆண்டு பறையர் மஹா ஜன சபையை நிறுவி தீண்டாமைகொடுமையை எதிர்த்தார்

1893 - பறையர் என்ற வார இதழை துவக்கி தலித்மக்களின் விடுதலைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
1894 - பஞ்சமி நில மீட்பு போராட்டம் நடத்தினார்.


1895 - சென்னைக்கு வருகை தந்த ஆளுநர் லார்ட் எல்ட்சின் அவர்களிடம்தமிழகத்தில் நிலவிய தீண்டாமை, சாத்திய கொடுமைகளை குறித்தும், தலித்கள்சரிசமமாக வாழ கல்வி , வேலைவாய்ப்பு அரசியல் பற்றி ஒரு பெரிய கோரிக்கைவிண்ணப்பம் ஒன்றை நேரடியாக கொடுத்தார்
1897 - சென்னை விக்டோரியா மண்டபத்தில் பூர்வீக குடிமக்களின் மாநாடுநடத்தினார்

1899 - சென்னையில் உள்ள வெள்ளைக்காரர்களின் வீட்டில் பட்லராக பனிசெய்தவர்களின் குறைகளை களைய இரவு 11 -மணிக்கு பிறகு பொது கூடம்ஒன்றை சென்னை ராயபேட்டையில் உள்ள தூய வெசுலியன் ஆலயத்தில் நடத்திஆட்சியாளர்களுக்கு தெரிவித்தார்

1901 - இங்கிலாந்து சென்றார் 1904 - தென் ஆபிரிக்க , நேட்டலில் உள்ள நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பலராக பனி புரிந்தார் . அங்கே பணியாற்றி கொண்டிருந்த காந்தி அவர்களுக்கும்மொழிபெயர்பாளராகவும் இருந்தார் அபோதுதான் அவருக்கு தமிழ் கற்றுகொடுத்தார் மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து போடுவதற்கு கற்றுகொடுத்தார்.

1921 மீண்டும் சென்னைக்கு வந்தார் அப்போது அரசியலாக பரிணமித்துள்ளநீதிகாட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1923 ஆண்டுமுதல் 1938 ஆண்டுவரை சென்னை சட்டப்பேரவை உறுபினராகஇருந்து பணியாற்றினார் அப்போது தலித்களை பிற சாதி இந்துக்கள் போல் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். பொதுச்சாலையில் நடக்கவும் பொது கிணற்றில்தண்ணீர் எடுக்கவும் பொது இடங்களில் அரசு அலுவலங்களில் நுழைவதற்குஉரிமை அளிக்கப்பட வேண்டும். தீண்டாமை ஒழிக்கப்படவேண்டும் எனசட்டசபையில் உரையாற்றினார். இந்த கோரிக்கையின் அடிப்படையில்தான் 1925ஆண்டு புனித ஜார்ச் கோட்டை அரசுப்பதிவிதழ் 1 A / 2660 ( No . L .X .M ) இன் கீழ்தலித் மக்களும் பிறரைப்போல சமமாக மதிக்கப்பட வேண்டுமென அரசுஆணையிட்டது .

1926 ஆண்டு பிப்ரவரி 20 ஆம் நாள் ரெட்டமலை சீனிவாசன் அவர்களின்சேவையை பாராட்டி அவருக்கு " ராவ்சாகிப்" என்ற பட்டத்தை அரசு வழங்கிகௌரவித்தது.

1928 தலித்கள் கல்வியால் தான் முனேற முடியும்என்ற அடிப்படையில் ஒரு "கல்வி கழகத்தை"ஆரம்பித்தார். அதன்மூலம் ஏழை மாணவர்களைகல்வி கற்கவும் செய்தார்

1928 ஆண்டு ரெட்டமலை சீனிவாசனின்துணைவியார் அரங்கநாயகி அம்மாள் தமது 60வயதில் இயற்கை எய்தினார். அம்மையாரின்கல்லறையில் ..தீண்டப்படாத மக்கள்பொதுச்சாலையில் நடக்கவும், பொது கிணற்றில்குடிநீர் எடுக்கவும் உரிமை வாங்கி தந்த 1925 ஏப்ரல் 28ஆம் நாள் அரசு வெளியிட்ட தீண்டாமைஒழிப்பிற்கான அந்த அரசு ஆணைபொறிக்கப்பட்டுள்ளது.

1930 - லண்டன் முதல் வட்ட மேசை மாநாட்டிலே 5 ஆவது மன்னரிடம்உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு மன்னரோடு கைகுலுக்கினார்கள். ஆனால் ரெட்டமலை சீனிவாசன் தன கோர்ட் பக்கெட்டில் " ராவ்சாகிப் ரெட்டமலை சீனிவாசன் பறையன் தீண்டப்படாதவன்" என பொறிக்கப்பட்டஅடையாள அட்டையை அணிந்திருந்தார். மன்னர் கை குலுக்க முன்வந்த போதுரெட்டமலை சீனிவாசன் அதை மறுத்து "நீங்கள் என்னை தொட்டால் தீட்டுஉங்களுக்கு ஒட்டிக்கொள்ளும் என்ற நிலை இருகிறதே! நான் எப்படி உங்களுக்குகை கொடுக்க முடியும்? " என கேட்டார்." இந்தியாவில் உள்ள தீண்டாமை,சாதிகொடுமை, பற்றி உங்களோடு விவரிக்க எனக்கு தனியாக நேரம் கொடுக்கஉறுதியளிதால் நான் உம்மோடு கை குலுக்கிறேன்" மன்னர் சரி என்றதும்அருகில் சென்று மன்னரோடு கை குலுக்கினர் இம்மாநாட்டில் தீண்டபடாதமக்களுக்கு அரசியல் அதிகாரம், கல்வி கற்க உரிமை, வயது வந்தோர்அனைவருக்கும் வாக்குரிமை, சட்ட சபையில் அரசியல் பிரதிநித்துவம் போன்றமிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

1931 - ரெட்டமலை சீனிவாசன் தலித்மக்களுக்கு செய்த பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு " ராவ் பகதூர் " என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தது.

1931 செப்டம்பர் - இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டுபுரட்சியாளர் அம்பேத்கருக்கு உற்ற துணையாக இருந்து தலித்மக்களின்விடுதலைக்கு போராடினார். தீண்டாமை ஒழிப்பு, கல்வி உரிமை, அரசியல்,பொருளாதார உரிமைகள், தனித்தொகுதி ஒதுக்கீடு, இரட்டை வாக்குரிமைபோன்ற கோரிக்கைகளை ஏற்றுகொண்டு உடனே மன்னர் அரசனை பிறபித்தார்.

1932 செப்டம்பர் 20 ஆம் நாள் ஐந்தாம் ஜார்ச் மன்னர் அளித்த அரசு ஆணையாகியதீண்டபடாத மக்களுக்கு வழங்கப்பட தனித்தொகுதி இரட்டை வாக்குரிமையைஎதிர்த்து காந்தி ஏரவாடா சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.அணைத்து சாதி,மத தலைவர்கள் ஒன்று கூடி புரட்சியாளர் அம்பேத்கரிடம்காந்தியை காப்பாற்ற வேண்டுமென கேட்டுகொண்டனர் அதனடிப்படையில் 1932செப்டம்பர் 26 ஆம் நாள் அனைவரும் ஒன்றுகூடி பூனாவில் தலித் மக்களுக்குகிடைத்த தனி தொகுதி உரிமையில் சில மாற்றங்களுடன் ஒப்புக்கொண்டார்.

1936 ஜனவரி 1 இல் ரெட்டமலை சீனிவாசன் சமூக பணிகளை பாராட்டி அரசுஅவருக்கு "திவான் பகதூர்" பட்டம் கொடுத்து ஊக்கிவித்தது.

1937 சென்னை மாநில முதல்வராக இருந்த போது, ஜமின் முறை ஒழிக்கப்பட்டபோது ஜமின்தரர்கள் நிலங்களை உழவர்கள், விவசாயிகள் கைப்பற்ற வேண்டும்என அறிக்கைவிட்டார்.உழுபவனுக்கே நிலம் சொந்தமென முழங்கினார்.

1937 ரெட்டமலை சீனிவாசனின் தொண்டுகளை பாராட்டி திரு வி க அவர்கள்"திராவிடமணி" என்ற பட்டத்தை வழங்கினார்

1938 - ஆகஸ்ட் 27 ஆம் நாள் தீண்டபடாத மாநில அட்டவனைபட்டியல்முன்னேற்ற ஆலோசனை வழங்கல் வாரிய அமைப்பின் ஆலோசகராகநியமிக்கப்பட்டார்

50 ஆண்டுகளுக்கு மேல் தலித் விடுதலைக்காக தொடர்ந்து அரும்பணியாற்றியமாபெரும் போராளி ரெட்டமலை சீனிவாசன் அவர்கள் தனது 85 வயதில் 1945செப்டம்பர் 17 ஆம் நாள் இயற்கை எய்தினார்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக