ஞாயிறு, 30 அக்டோபர், 2016

அதிமுக அமைச்சர்களுக்கு நிம்மதியான முதல் அமாவாசை .. பதவி பறிபோகதில்லை?

கரூர் மாவட்டத்தில் கும்பல் ஒன்று ஒ.பன்னீர் செல்வத்தின் உறவினர்கள்
என்று கூறி மணல் அள்ளி வருகின்றனர். இதுதொடர்பாக நல்லக்கண்ணு அவர்கள் அளித்த புகாரை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை. கரூர் மாவட்டம் கடம்பன்குறிச்சி பகுதியில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளி வருகின்றனர். தற்போது தமிழகத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஒ.பன்னீர் செல்வத்தின் உறவினர்கள் என்று கூறி மணல் அள்ளி வருவதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய நல்லக்கண்ணு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஆற்றில் இருந்து மணல் அள்ளி செல்லும் லாரிகள் அடங்கிய வீடியோவை ஆதாரமாக எடுத்து மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக புகார் செய்தனர்.
ஆனால் மாவட்ட ஆட்சியர் இந்த புகாரை கண்டுக்கொள்ளவில்லை. இதுகுறித்து போராட்ட குழுவின் ஒருங்கிணைப்பாளர் முகிலன் பேட்டியளித்தபோது கூறியதாவது:- அமைச்சர்கள் ஓ.பி.எஸ், விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதில் ஒன்றாக கூட்டு சேர்ந்துள்ளனர். தங்கள் மீது தவறு இல்லையென்றால்,அதனை அவர்கள் நிரூபிக்கட்டும், என்று கூறினார் வெப்துனியா.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக