திங்கள், 31 அக்டோபர், 2016

சிகிச்சையை முடித்துக் கொள்கிறார் ரிச்சர்ட் பேல்?

minnambalam,com : அதிமுக-வின் தலைவராக ஜெயலலிதா பொறுப்பேற்றுக் கொண்ட இந்த 25 ஆண்டுகளில் அவர் வாழ்த்து சொல்லாத தீபாவளியும் முடிந்து விட்டது. தீபாவளிக்கு மறுநாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை தினம் என்பதால் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 68 பூசணிக்காயில் நெய் தீபம் ஏற்றி பூஜையை நடத்தி முடித்தனர் அதிமுக-வினர்.
இதுவரை மூன்று முறை சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த ரிச்சர்ட் பேல் மீண்டும் சென்னை வந்துள்ளார். அவர் வந்ததையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்களும் சென்னைக்கு வர, இப்போதைக்கு இவர்களின் தலைமையில் சிகிச்சை நடந்து வருகிறது. நேற்று காலை அப்பல்லோவுக்கு வந்த ரிச்சர்ட் பேல் ஒரு மணி நேரம் சிகிச்சையை கவனித்து விட்டு கிளம்பிச் சென்று விட்டார்.
இப்போது நான்காவது முறை அவர் வந்திருக்கும் நிலையில், அடிக்கடி சென்னை வருவதால் தனது மருத்துவப் பணிகள் பாதிக்கப்படுவதாலும், தன்னிடம் சிகிச்சை பெறுகிறவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்க முடியாத நிலை உள்ளதாலும் ரிச்சர்ட் பேல் இன்னும் சில நாட்கள் மட்டும் சிகிச்சை அளித்து விட்டு இனி லண்டனில் இருந்தபடியே சிகிச்சையை தொடரப் போவதாக முடிவு செய்துள்ளார் என்கிறது அப்பல்லோவின் உள் வட்டார தகவல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக