சனி, 22 அக்டோபர், 2016

தமிழிசை : தினம் ஒரு தலித் வீட்டில் உண்கிறேன்! என்ன ஒரு தியாகம்? இந்த நாடார் தலைவியை விட பாப்பாத்திகள் மேல் ?

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டுமென தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும்போது, வழியில் விழுப்புரம் மாவட்டம் கிளியனூரில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு கட்சி பிரமுகர்களோடு உணவருந்தி உரையாடிவிட்டு, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “பிரதமர் மோடியின் உத்தரவுப்படி தினம் ஒரு தலித் வீட்டில் மதிய உணவு உண்டு வருகிறேன். அதன்படி இன்று சகோதரர் ராமமூர்த்தியின் வீட்டுக்கு வந்து உணவருந்தினேன். தலித்துக்களை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி வரும் தமிழகத்தில், பாஜக மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் மூன்று தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட உள்ளது. வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு கட்சி தலைமையின் ஒப்புதலோடு விரைவில் வெளியிடப்பட்டும். கடந்த முறை பணப்பட்டுவாடா என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது.
இந்த முறை எவ்வித குறைபாடும் இல்லாமல், ஜனநாயக அடிப்படையில் நியாயமாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறோம்.
காவிரி பிரச்னையில் அரசியல் நோக்கோடு பிரதமர் மோடியை மட்டும் தமிழக அரசியல்கட்சிகள் குறை செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக அரசு 2,000 கன அடி நீரை திறந்து விட வேண்டும்” என்று கூறினார்.மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக