இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். ‘இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுக-வில் இல்லை என்பதை அறியும்போது, கவலையாக உள்ளது. #காசு பணம் துட்டு மணி மணி’ என்று ஆங்கிலத்தில் ட்விட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி. இதன்மூலம், இடைத்தேர்தலில் சரவணன் வெற்றிக்கு மறைமுகமாகக்கூட அழகிரி உதவப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. முன்பு டாக்டர் சரவணன், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதன்பிறகு பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியமாகிய சரவணன், மு.க.ஸ்டாலின் மூலமாக திமுக-வில் இணைந்தவர். அந்த அதிருப்தியை தயாநிதி அழகிரி இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.மின்னம்பலம்,காம்
சனி, 22 அக்டோபர், 2016
தயாநிதி : காசு பணம் துட்டு மணி மணி’ - (திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்! திமுக,பாஜக ,மதிமுக அப்புறம் திமுக .. ஏனுங்க? )
இடைத்தேர்தல் நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணன், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி, தஞ்சாவூரில் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் போட்டியிட உள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் டாக்டர் சரவணனை திமுக வேட்பாளராக நிறுத்தியுள்ளதை மு.க.அழகிரியின் மகனான தயாநிதி அழகிரி அவரது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். ‘இடைத்தேர்தலில் போட்டியிட சரவணனைவிட நல்ல வேட்பாளர் மதுரை திமுக-வில் இல்லை என்பதை அறியும்போது, கவலையாக உள்ளது. #காசு பணம் துட்டு மணி மணி’ என்று ஆங்கிலத்தில் ட்விட் செய்துள்ளார் தயாநிதி அழகிரி. இதன்மூலம், இடைத்தேர்தலில் சரவணன் வெற்றிக்கு மறைமுகமாகக்கூட அழகிரி உதவப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. முன்பு டாக்டர் சரவணன், மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அதன்பிறகு பாஜக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளில் ஐக்கியமாகிய சரவணன், மு.க.ஸ்டாலின் மூலமாக திமுக-வில் இணைந்தவர். அந்த அதிருப்தியை தயாநிதி அழகிரி இப்படி வெளிப்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.மின்னம்பலம்,காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக