திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், விஜயகாந்த் போட்டியிட வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் நெருக்கடி கொடுக்க துவங்கி உள்ளனர்.
தஞ்சாவூர்,
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 19ல்,
தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில், அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு
போட்டியாக, வேட்பாளர்களை களமிறக்க வேண்டும் என, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் விரும்புகிறார். இதற்காக,
வேட்பாளர் தேர்வு ரகசியமாக நடந்து வருகிறது.
இதுபற்றி
தகவலறிந்த, தஞ்சாவூர் மற்றும் கரூர் மாவட்ட நிர்வாகிகள்,விஜயகாந்தை
சந்தித்து, 'தேர்தலை புறக்கணிக்க வேண்டும்' என்றனர். ஆனால்,
திருப்பரங்குன்றம் தொகுதியில், அவர் போட்டியிட வேண்டும் என, நெருக்கடி
கொடுக்க துவங்கி உள்ளனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், விழுப்புரம் மாவட்டம், உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த்,'டிபாசிட்' இழந்தார். இது, அவரது தீவிர விசு வாசிகள் மனதில், ஆறாத ரணமாக உள்ளது.
இந்த தோல்வியை ஈடுசெய்ய, திருப்பரங் குன்றத்தில், விஜயகாந்த் போட்டியிடவேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர். விஜயகாந்தின் சொந்த மண் என்பதால், திருப்பரங்குன்றத்தில் அவர் போட்டியிட்டால், வெற்றி கிட்டும். மாநில நிர்வாகிகள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை, இக்கருத்தையே கூறுவது, விஜயகாந் திற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் - தினமல.காம்
தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக