செவ்வாய், 25 அக்டோபர், 2016

தலாக்கை ஏற்க மறுக்கும் முஸ்லிம் பெண் .. உலகில் 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது இந்தியா ஏன் அதை பின்பற்றவேண்டும்?


புனே: மூன்று முறை தலாக் முறைக்கு 18 வயது முஸ்லீம் பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அர்ஷியா என்ற 18 வயது பெண் கூறுகையில், இஸ்லாமிய சட்டம் மூன்று முறை தலாக் கூறும் சட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இதற்காக கூறப்படும் காரணத்தையும் நான் ஏற்க மாட்டேன். எனது கருத்து மற்றும் விருப்பத்தை கேட்காமல், என்னை பிடிக்கவில்லை என எப்படி கூற முடியும். உலகில் உள்ள 22 நாடுகள் இஸ்லாமிய சட்டத்தை ஏற்காத போது, இந்தியா மட்டும் ஏன் பின்பற்ற வேண்டும். 16வயதில் எனக்கு திருமணம் நடந்தது. அப்போது எனது பெற்றோர் வரதட்சணை கொடுத்தனர். எனது கணவர் தரப்பினர் பண வசதி படைத்தவர்கள். பாராமதி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு, மாமியார் என்னை கொடுமைபடுத்தினார். நாய் போல் என்னை வேலைவாங்கினர்.
எனது தாயாருக்கும், மாமனாருக்கும் தவறான தொடர்பு உள்ளதாக மாமியார் கூறினார். கணவரின் உறவினர்களும் என்னை துன்புறுத்தினர். நான் கர்ப்பமாக இருந்த போதும் இந்த கொடுமை நடந்தது. ஒரு நாள் எனது பெற்றோர் வீட்டில் இருந்த போது, தலாக் நோட்டீஸ் வந்தது இது
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக எனது கணவரை அழைத்து பேசிய போது, என்னை ஏற்க மறுத்து விட்டார். என்னை பிடிக்கவில்லை எனக்கூறினார். இனிமேல் எனது மற்றும் குழந்தையின் எதிர்காலம் என்ன எனக்கூறினார்.

அவரின் தாயார் கூறுகையில், 16 வயதில் எனது மகளுக்கு திருமணம் செய்து மிகப்பெரிய தவறை செய்து விட்டோம். எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. இதுபோன்ற துயரங்களை சமுதாயம் ஏன் தட்டி கேட்கவில்லை என்றார்.  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக