ஞாயிறு, 9 அக்டோபர், 2016

தமிழக அரசை தற்காலிகமாக வழிநடத்திச்செல்ல மாற்று ஏற்பாடு தேவை: என்.ராம் பேட்டி

அந்த ஆடியோ பேட்டியில் அவர்,  ‘’முதல்வரின் உடல்நிலையை பற்றி
தெளிவான அறிக்கை வெளிவந்திருக்க வேண்டும்.  ஆனால், முதலில் அவருக்கு காய்ச்சல் என்று அறிக்கை வந்தது. தற்போதுதான் கிரிட்டிக்கல் நிலையில் இருந்து மெதுவாக தேறி வருகிறார் என்ற அறிக்கை வெளிவந்திருக்கிறது.   கிரிட்டிக்கல் நிலையில் இருந்த முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும்.;அதிமுகவில் எல்லா முடிவுகளையும் எடுப்பது ஒரு இடம் என்பதால்,  அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் முடிவு எடுக்கும் தைரியமில்லை. அவர்களால் சரிவர இயங்க முடியவில்லை.  இதனால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் மாற்று ஏற்பாடு அவசியம் தேவை.  முதல்வரோ பிரதமரோ செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது மாற்று ஏற்பாடு தேவை.  தற்காலிகமாக அரசை வழிநடத்திச்செல்வோரை நியமிக்க வேண்டும்.


அந்த பொறுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க கூடாது.  அமைச்சர்களைத்தான் நியமிக்க வேண்டும்.
அண்ணா, எம்.ஜி.ஆர்.  ஆட்சிக்காலங்களில் அவர்களால் இயங்க முடியாமல் இருந்தபோது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.  அந்த நடவடிக்கை இன்றைக்கும் தேவை.   அரசு நிர்வாகம் தடைபடாமல் இயங்க வேண்டும்.  ஆனால் அதற்கு சரியான நடவடிக்கை இன்னமும் எடுக்கவில்லை.  மாற்று ஏற்பாடு எடுக்க வேண்டும் என்றாலும் ஜெயலலிதாவின் அனுமதியை பெற்றாக வேண்டும்.  ஆனால் இப்போது ஜெயலலிதா இருக்கும் நிலையில் அவரிடம் அனுமதி கேட்பது சரியல்ல.  அந்த அளவிற்கு தொந்தரவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

மத்திய அரசு இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு இப்படி செய்யுங்க என்று அட்வைஸ் தரலாம்.  ஆனால், கட்டளையிடக்கூடாது.p;முதல்வரின் உடல்நிலையை தெளிவாக சொல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க வேண்டும்.  தற்போது லண்டன் டாக்டர், எய்ம்ஸ் மருத்துவக்குழு ஆகியோரின் வருகைக்கு பிறகு முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   ரொம்பவும்  விளக்கமான அறிக்கையை எதிர்பார்க்ககூடாது.  முதல்வர் என்றாலும் தனிப்பட்ட ஒன்று உண்டு. எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்றும் எதிர்பார்க்கக்கூடாது.

முதல்வரின் உடல்நிலை குறித்து தினமும் அறிக்கை வரவேண்டும். தேவையில்லாத வதந்தி களை இதனால் தவிர்க்க முடியும்’’என்று கூறியுள்ளார்.  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக