ஞாயிறு, 9 அக்டோபர், 2016

BBC :வானூர் பட்டாசு தொழிற்சாலையில் விபத்து: ஐவர் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே துருவையில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் விபத்து நடைபெற்ற பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் தரை மட்டமாக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடம் இன்னமும், அப்பகுதியில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இந்த காலக்கட்டத்தில், மிக அதிகமான உற்பத்தி நடைபெற்று வந்ததாகவும், இதன் காரணத்தால் கூட இந்த விபத்து ஏற்பட்டு இருக்கக் கூடும் எனவும் கருதப்படுகிறது.
ஏற்பட்ட வெடி விபத்தில், இது வரையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடம் இந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று நடைபெற்ற விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விபத்தில் காயமடைந்தோருக்கு, தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்காவில் உள்ள துருவை எனும் பகுதியில் தான் அந்த பட்டாசு தொழிற்சாலை அமைந்துள்ளது. விபத்து நடந்த இடம் விபத்து நடைபெற்ற அந்த பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் நேரில் ஆய்வு செய்தார். எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை அவர் அப்போது நேரில் கேட்டறிந்தார். பட்டாசு தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அங்கிருக்கும் பொது மக்கள் குற்றஞ்சாட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக