செவ்வாய், 4 அக்டோபர், 2016

சசிகலா புஷ்பாவிடம் போலீஸ் 3 நேரம் விசாரணை .. குழந்தைகளுக்கு ஈட்டி எல்லாம் குத்துராங்க அதை கேக்க துப்பில்லை ...

தூத்துக்குடி, வீட்டில் வேலைபார்த்த பணிப்பெண்கள்
அளித்த புகாரில் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மாநிலங்களவை உறுப்பினர் எல். சசிகலா புஷ்பா திங்கள்கிழமை ஆஜராகினார். அப்போது, அவரிடம் போலீஸார் மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரைச் சேர்ந்தவர் எஸ்.சசிகலா புஷ்பா. அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் அண்மையில் அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, சசிகலா புஷ்பா வீட்டில் பணிப் பெண்களாக வேலை பார்த்த திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி கிராமத்தைச் சேர்ந்த பானுமதி மற்றும் ஜான்சிராணிஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி பாலியல் தொந்தரவு மற்றும் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தனர்.


இதைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா,அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன்,மகன் பிரதீப் ராஜா,தாய் கெüரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.

 இந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததால் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி ஆறு வார காலத்துக்கு சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.

 மேலும்,பாலியல் தொந்தரவு புகார் தொடர்பாக அக்டோபர் 3 ஆம் தேதி புதுக்கோட்டை காவல் நிலையத்திலும், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில் போலி கையெழுத்திட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில்  அக்டோபர் 7 ஆம் தேதி மதுரை கோ. புதூர் காவல் நிலையத்திலும் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

 இதன் தொடர்ச்சியாக விமானம் மூலம் திங்கள்கிழமை தூத்துக்குடிக்கு வந்த சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராகினர்.

 முதலில் சசிகலா புஷ்பாவிடம் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அன்னத்தாய் தனியாக விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணை ஏறத்தாழ 3 மணி நேரம் நீடித்தது. அப்போது,300-க்கும் மேற்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 இதையடுத்து பகல் 1.30 மணியளவில் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்த சசிகலா புஷ்பா தன்னிடம் விசாரணை முடிந்து விட்டதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டு விமானம் மூலம் சென்னை சென்றுவிட்டார்.

தொடர்ந்து சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன்,மகன் பிரதீப் ராஜா ஆகியோரிடம் போலீஸார் தனித்தனியே மாலை 6 மணி வரை விசாரணை மேற்கொண்டனர்.    தினமணி.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக