செவ்வாய், 4 அக்டோபர், 2016

காவிரி .. கர்நாடகா .. மத்தியரசு.. தேசியகட்சிகள் .. கொந்தளிக்கும் முகநூல் பதிவுகள்

என்னாடா ..கேப்மாரித்தனம் ..இது ?
தமிழன் ..தமிழ்நாடுன்னா ..என்னதாண்டா.. நினைக்கறீங்க?
கூட்டாட்சிக்கு ...குண்டு வைக்கிறது ..கர்நாடகம் ..
திரிக்கு ...கொள்ளி வைக்கிறது...மத்திய அரசு..
உச்சநீதிமன்றத்தை...
முதலில் ..கர்நாடக.. மாநில காங்கிரஸ் அரசு ..அவமதித்தது!
அடுத்து ...கர்நாடக.. மத்திய மந்திரிகள் ..அவமதித்தார்கள்!
இப்போது ..மத்திய.. பீ.ஜெ.பீ.. அரசு.. அவமதித்திருக்கிறது!
தவிர ..தமிழக எம்.பீ.க்களின்..தயவால் மட்டுமே பிரதமரான
தேவகவுடா ..அவமதிப்புக்கு ..தலைமை தாங்குகிறார்!
நேற்றுவரை ...இந்த பிரச்சனையில் ..உச்சநீதிமன்றத்தின்
நிலைதான் எங்கள் நிலை என்று சொன்ன ...பீ.ஜெ.பீ..ஆட்சி
இன்றைக்கு..எங்களுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு
அதிகாரமில்லை...என்று சொல்வது..கடைந்தெடுத்த..???????
அப்போது..உச்சநீதிமன்றம்..சொல்லித்தானே..அரசிதழில்..
வெளியிட்டீர்கள்? அன்றைய அறிவு இன்று எங்கே போனது?

தமிழக பீ.ஜெ.பீ...கபட திருவாயை ..இன்னும் திறக்கவில்லை!
ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஒன்றாக ..கிளர்ந்தெழுந்திட
வைக்க வேண்டிய ..'ஜெ'..அரசு..ஒரு ..ஒண்ணேகால் லட்சம்..
ஓட்டுக்கள் கூடவாங்கிவிட்ட ஒரே காரணத்தால் தமிழகத்தின்
எந்த கட்சியையும் மதிக்கமாட்டேன்!..என்கிற இறுமாப்பிலும்..
அதற்கு ..ஊமை பாத்திரம் வகிக்கிற ஒத்து ஊடகங்களும்...
வாய்த்திருக்கிற ..50...எம்.பீ.க்களும்..மன்னிக்கவும்..(50-1=49)
(சசிகலா புஷ்பாவை ..தவறுதலாக ...சேர்த்து விட்டேன்)
காலில் விழுவதும்...காஷ்மீர் பாட்டு பாடுவதும்தான் தங்கள்
கடமை என்று ..பயனற்ற உறுப்பினர்களாய்..திரிந்து கொண்டு
இருப்பதும்..நமக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற பெருங்கொடுமை
இப்போதும் எப்படியாவது ..6..வருடங்களாக ஆட்சியிலேயே
இல்லாத கருணாநிதியை..வசை பாட முடியுமா?..என்றே
அலையும்..நியாயமற்ற..அற்ப அரசியல் ..அயோக்கியர்கள்!
இந்திய இறையாண்மையையும்..எல்லையையும்..காக்க
இங்கிருக்கிற தமிழன் ...காஷ்மீரில் உடல்வெடித்து..சிதறி
சாகவேண்டும்!...ஆனால்..இங்கிருக்கிற..தமிழன் தண்ணீர்
கேட்டால் ..அதை தராமல் ..அவன் சாகவேண்டும்! ....ஆக
எப்படி பார்த்தாலும்..தமிழனுக்கு ..தேசியம் ..தந்துகொண்டு
இருப்பது தரப்போவது சாவுதான்! தமிழன்உயிர் = தேசியமா?
அப்படியானால்...இது ஒரு..கூட்டு களவாணி தேசியம்?..
கரி திருட்டு..தேசியம்?..தமிழர் ஒழிப்பு தேசியம்?..வலுத்தவன்
தேசியம்?..கூட்டாட்சி..தேசியமல்ல..சரிதானே?..இனியாவது..
இங்கிருக்கிற தமிழன் உடமையை+உரிமையை அணுஅளவும்
திருட்டு..தேசியத்திடம்..பங்கீட்டின் ..பேரால் பரி கொடுக்காமல்
தேசிய+கூட்டாட்சி பங்கீடுகளும் பகிர்வுகளும் சமப்படுத்தப்படு வரைக்கும்.. தமிழர் சொத்துக்களை...தமிழரே ஆள்வோம்!
தமிழகமே அனுபவிக்கட்டும்!..பொய் தேசியம் திருந்தட்டும்!
முகநூல் பதிவு Alagarasan Veerabathran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக