வெள்ளி, 21 அக்டோபர், 2016

சென்னை 145 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு .. ஓடிசாவில் இருந்து கேரளாவுக்கு கடத்தபப்ட்ட குழந்தைகள் ரயில்வே போலீசார் ..

ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரம் தனியார்
நிறுவனத்திற்கு வேலைக்காக ரயில் மூலம் அழைத்து வரப்பட்ட 145 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே போலீசார் மீட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னை வழியாக திருவனந்தபுரத்திற்கு ரயில் மூலம் குழந்தை தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை, தமிழக -கேரளா எல்லையான பாரச்சாலை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். அப்போது 50 ஆடவர் மற்றும் 95 பெண்கள் உட்பட்ட 145 குழந்தை தொழிலாளர்களை ரயில்வே போலீசார் மீட்டனர். இந்த குழந்தைகளை அழைத்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஏஜன்ட் ராம்நாத் மிஸ்ரா என்பவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் உறவினர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நியுஸ் 7.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக