வெள்ளி, 9 செப்டம்பர், 2016

சிவலிங்கா படத்தில் லாரன்ஸ் ராகவேந்திரா

காமடி கலந்த திகில் திரைப்படங்கள் என்றாலே ராகவா லாரன்ஸ் என்று சொல்லும் அளவுக்கு  ஒரு புதிய ட்ரெண்ட் செட்டராக விளங்கி வருகிறார் அவர் . நடனம், இயக்கம், சமூக சேவை  போன்ற  பல முகங்கள் இவருக்கு இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் என்ற முகமே  இவரது முதல் அடையாளமாக இருந்து வருகிறது ."மொட்ட சிவ கெட்ட சிவ"  படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் தனது அடுத்த படத்திற்கான பணியை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார்.
காஞ்சனா 3" எப்போது துவங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும்நிலையில்... பி.வாசு இயக்கத்தில் 'சிவலிங்கா' படத்தில் நடிக்க லாரன்ஸ் தயாராகி வருகிறார். சமீபத்தில் நடிகர் ரஜினிகந்தை அவரது வீட்டில் சந்தித்த ராகவா லாரன்ஸ் தான் பி.வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடிப்பது பற்றி கூறி வாழ்த்துப் பெற்றார். மேலும் அவர் தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றி கூறி அது சம்மந்தமான புகைப்படங்களை அவரிடம் காண்பித்தார். கோயில் கட்டும் பணி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் ராகவா லாரன்ஸ் கூறினார். நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக